அரசாங்கத்தின் போலிப் பிரச்சாரங்களுக்கு மக்கள் ஏமாந்து விடக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச விரக்தியில் இருப்பதாக பிரச்சாரம் செய்யப்படுகின்றது.
தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பீதி காரணமாக அரசாங்கம் இவ்வாறு பிரச்சாரம் செய்கின்றது.
நான் ரணசிங்க பிரேமதாச என்ற சிறந்த மனிதரின் மகன் என்பதனை மக்கள் மறந்து விடக் கூடாது. கொள்கைகளிலிருந்து மாறக்கூடியவர்கள் அல்ல.
ஆளும் கட்சியின் பலர் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசாங்கத்தின் சார்பில் குரல் கொடுப்பவர்களை பாருங்கள்.
அவர்களின் முகங்களில் தோல்வியின் அச்சம் புரயோடியுள்ளது. அவர்களின் அகத்தில் உள்ள அச்சம் முகத்தில் வெளிப்பட்டுள்ளது.
சிங்கங்களைப் போன்று இருந்தவர்கள் இன்று திக்கு திசை அறியாது நிலை குலைந்துள்ளனர்.
எனது தனிப்பட்ட கருத்து எதுவென்றாலும், ஐக்கிய தேசியக் கட்சி கூட்டாக இணைந்து எடுத்த தீர்மானத்திற்கு நான் ஆதரவு வழங்குவேன்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கி, நிறைவேற்று அதிகார பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை பதவியில் அமர்த்துவோம் என சஜித் பிரேமதாச சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
Post A Comment:
0 comments: