தேஞ்ச செருப்பின காட்டுபுள்ள..!

Share it:
ad

(கவிஞர்  பொத்துவில் அஸ்மின்)

மூழ்கிடும் கப்பலில் ஏற நெனச்சிடும்
முட்டாள் பசங்கள என்ன சொல்ல
மூடையில் காசினை கொட்டிக்கொடுத்ததும்
மூத்திரம் சிலருக்கு தீர்த்தம்புள்ள

மூலையில் எங்கள போட்டு மிதிச்சது
மூளைய விட்டின்னும் போகவில்ல
மூனாம் மொறையவன் மூக்க ஒடைக்கனும்
முட்டுக் கொடுப்பவன் 'சோனி'யில்ல....

ரோசம் பறந்தின்று முந்தி விரித்திடும்
மந்திரி ரோட்டுல நாயுமில்ல
நாசமாப் போன நரியனின் பக்கம்
நம்மவர் போவது ஞாயமில்ல

தேர்தலில் மட்டும் தேத்தண்ணி ஊத்திடும்
தேவாங்கு எமக்கு தேவையில்லை...
தேடிவருவான் 'மாமா'மாருடன்
தேஞ்ச செருப்பின காட்டுபுள்ள...

Share it:

Post A Comment:

0 comments: