முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கத்தின் ஏற்பாட்டில் மாணவர்கள் கௌரவிப்பு (படங்கள்)

Share it:
ad
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)  

முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த வருடங்களைப்போல் 7வது வருடமாகவும் இம்முறையும் 2013ஆம் ஆண்டில் க.பொ.த.(சா.தர) தில் ஒன்பது பாடங்களிலும் அதி விஷேட (9ஏ) சித்தி பெற்றவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

சங்கத்தின் தலைவர் அஹமட் முனவ்வர் தலைமையில் கொழும்பு மருதானை ஸாஹிராக் கல்லூரியின் அப்துல் கபூர் மண்டபத்தில் இன்று (30) இடம் பெற்ற நிகழ்வில் சுமார் 275 மாணவ, மாணவியர்கள் ஒவ்வொருவருக்கும் பெறுமதி வாய்ந்த புத்தக பொதிகள், மற்றும் பணப்பரிசில்களுடன் (ஒரு பாடத்திற்கு ஆயிரம் ரூபா வீதம் ஒன்பதாயிரம் ரூபா வழங்கப்பட்டது) மெப்ஸ் நிறுவனத்தின் சான்றிதழ்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கி  கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் மாணவ, மாணவியர் பிரமுகர்களால் கௌரவிக்கப்படுவதையும், இவ்வருடம் நடைபெற்ற க.பொ.த.உயர் தரத்திர் விஞ்ஞானப்பாடத்தில் மூன்று பாடங்களிலும் ஏ (3யு) சித்தி பெற்ற  கண்டி பெண்கள் உயர் பாடசாலை மாணவி பாத்திமா ஆர்ஷிதா முசம்மிலுக்கு பணப்பரிசில் உள்ளிட்ட பெறுமதியான பணப்பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் அதிதிகளும் மெப்ஸ் நிறுவனத்தால் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





Share it:

Post A Comment:

0 comments: