மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்க ஜே.வி.பி. தயங்குவது ஏன்..?

Share it:
ad
மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வார் என்பதில் நூறு வீத நம்பிக்கை கிடையாது என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

தொலைக்காட்சி அரசியல் விவாதமொன்றில் பங்கேற்ற போது ஜே.வி.பி. பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் ரத்து செய்யப்படும் என உறுதிமொழிகள் அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களிலும் இவ்வாறான உறுதிமொழிகள் அளிக்கப்பட்டிருந்த போதிலும் அவை நிறைவேற்றப்பட்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே மைத்திரிபால சிறிசேனவிற்கு நேரடியாக ஆதரவளிக்க ஜே.வி.பி தயங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை தோற்கடிக்க வேண்டும் என்பதில் ஜே.வி.பி அதிக சிரத்தை எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

Share it:

Post A Comment:

0 comments: