அஸ்மின் அய்யூப் அச்சுறுத்தப்பட்டார் - பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

Share it:
ad
யாழ். மாவட்ட முஸ்லிம்களின் கல்வி நிலைகள் தொடர்பாக யாழ் ஒஸ்மானியா கல்லூரி, யாழ். கதீஜா கல்லூரி மீளத்திறப்பு தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் .தி.குருகுலராஜா அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்விற்கு யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தின் கல்வியியலாளர்கள்,
சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் உட்பட வடக்கு மாகாண கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இந்நிகழ்வினை ஏற்பாடு செய்த வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் அவர்கள் உரை நிகழ்த்தும்போது, யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேசங்களை சூரையாடிய கள்வர்களே யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு பிரதான தடையாக செயற்படுகின்றார்கள் என்று தெரிவித்தார்.

இதன்போது நிகழ்வில் அழையா விருந்தாளிகளாக கலந்துகொண்டிருந்த இருவர் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அவர்கள் மீது மோசமான வார்த்தைப் பிரயோகங்களை பிரயோகித்ததுடன், நாம் கொலையும் செய்வோம் என்றும் நிகழ்வினைக் குழப்பும் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டனர்.

இந்நிலையில் குழப்பம் விளைவித்தோரை கூட்டத்திற்கு சமூகமளித்த பலரும் மண்டபத்தை விட்டும் வெளியேற்றினர்.

மேற்படி சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் உடனடியாக முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டது.
Share it:

Post A Comment:

0 comments: