முஸ்லிம்களின் பெரும் பகுதியினர் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறினோவை ஆதரிக்க வேண்டுமென்ற தெளிவான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்.
முஸ்லிம் சமூகத்தின் இந்த நிலைப்பாட்டை முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும், முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்களும் நன்கு அறிந்துவைத்துள்ளனர்.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸானாது மஹிந்த ராஜபக்ஸவை ஆதரிக்கச் சொன்னாலும் முஸ்லிம்களின் வாக்குகள் கிடைக்கமாட்டாது என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாக முஸ்லிம் காங்கிரஸின் உயர் பிரமுகர் (பாராளுமன்ற உறுப்பினர்) ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.
அதேவேளை முழுமையான கரையோர மாவட்டம் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப்பெற்றால், முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்த ராஜபக்ஸவை ஆதரிக்குமெனவும், கரையோர மாவட்டம் கிடைக்காவிட்டால் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிக்கும் நிலை நிலவுவதாகவும் நம்பகரமாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.
Post A Comment:
0 comments: