ஆளும் கட்சியினர் பலர், எதிர்க்கட்சியில் இணைவர் என்ற எதிர்பார்ப்பு நிர்மூலமாக்கப்பட்டுள்ளது

Share it:
ad
ஐக்கிய தேசியக் கட்சியை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஏமாற்றியுள்ளதாக வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குலக நாடு ஒன்றின் ராஜதந்திரியொருவர் சந்திரிக்காவின் பெயரை முன்மொழிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் சந்திரிக்காவின் குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதனை விரும்பவில்லை எனவும், அதன் காரணமாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் அதிகளவில் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பை நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாகத் தெரவித்துள்ளார்.

ஆளும் கட்சியின் அறுபது உறுப்பினர்கள் இணைந்து கொள்வதாக சந்திரிக்கா, ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்குறுதி அளித்திருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் அவ்வாறு பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் ஆளும் கட்சியிலீருந்து விலகாத காரணத்தினால் ரணில் விக்ரமசிங்க ஏமாற்றமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியை முற்று முழுதாக ஏமாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Share it:

Post A Comment:

0 comments: