மைத்திரிபாலவை மதிக்கிறேன், ரணில் இலங்கையில் அரபு வசந்தத்தை ஏற்படுத்த முயற்சி - தயாசிறி

Share it:
ad
மைத்திரிபால சிறிசேனவை நான் மதிக்கிறேன். ஆனால், அவர் கட்சியிலிருந்து விலகியதனால் அவருடைய எதிர்காலம் நாசமடைந்துள்ளது. ஜனாதிபதி முறையை ஒழிப்பதில் எமக்கும் பிரச்சினை இருக்கிறது. சந்திரிகாவிற்கு பத்து வருடத்திற்குள் ஜனாதிபதி முறையை நீக்கமுடியவில்லை. அவரை நாங்கள் பெரிதும் நம்பியிருந்தோம் என ஆளுங்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ரணில் அமெரிக்காவிற்கு படிக்கச் செல்லவில்லை. ஆட்சிமாற்றத்தையும் அரபு வசந்தத்தையும் இலங்கையில் ஏற்படுத்துவது தொடர்பாகவே படிக்கச் சென்றார். அரசுக்குள் இராணுவ அதிகாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த உறுப்பினர்களிடம் ஆயுதத்தை வழங்கி குழப்ப முயற்சித்துள்ளார். இலங்கையில் ஒருபோதும் அரபு வசந்தத்தை ஏற்படுத்த முடியாது. ரணிலுக்குப் பின்னால் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட தயாராக இல்லை. காரணம், அவர் பலவீனமான தலைவர் என முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர இன்று 24-11-2014 நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்தார். 
Share it:

Post A Comment:

0 comments: