மனம்போன போக்கில் அமீர் அலி, பதவியை பெற்றுக்கொள்வது அரசியல் தற்கொலைக்கு சமமானது

Share it:
ad
(அஷ்ரப் ஏ. சமத்)

ஜக்கிய மக்கள் சுதந்திர முன்ணனியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பிணர்  ஏ.எச்.எம் அஸ்வர் இராஜினமா செய்ததையடுத்து  அந்த வெற்றிடத்திற்கு  அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தரும்,கிழக்கு மாகாண சபை உறுப்பிணர் எம்.எஸ் அமீர் அலிக்கு வழங்கப்பட உள்ளதென்று செய்திகள் வெளிவந்துள்ளன.
கிழக்கு மாகாண சபை அ.இ.ம.காங்கிரஸ் தணித்து இயங்கப்போவதாக எடுத்த முடிபையடுத்து இந்த தேசியப்பட்டியல் எம்.பி பதவியை அமீர்அலிக்கு வழங்குவதென முடிபுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக கிழக்கு மாகண சபையின் பிரதித் தவிசாளாரும் அ.இ.ம.காங்கிரஸ் கட்சியின்  முக்கியஸ்த்தவருமான  எம். எம். சுபையிரிடம்; தொடர்பு கொண்டு கேட்டபோது ஜனாப் அமீர் அலி அவர்கள் கல்குடா தொகுதி மக்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே இந்த எம்.பி பதவியை ஏற்பது குறித்து தீர்க்கமான முடிபை எடுப்போம் என சுபையிர் தெரிவித்தார்.

அவர் மேலும் தகவல் தருகையில்,

வெறுமனே மனம் போன போக்கில் இந்தப் பதவியை இந்த நேரத்தில் பெற்றுக் கொள்வது ஓர் அரசியல் தற்கொலைக்கு சமமானது என்றார்.  கிழக்கு மாகணத்தில் எமது கட்சிக்கு முதலமைச்சர் பதவி தருவதாக அரசாங்கம் இரண்டு தடவைகள் எமக்கு உறுதியளித்தது. கிழக்கு மாகாணத்தில் முதலாவது தேர்தலில் ஆகக் குடுதலான ஆசனங்களைப் பெறும் கட்சிக்கு முதலமைச்சர் பதவி வழங்குவதாக வாக்குறுதி அளித்து. அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு அன்று இப்பதவி வழங்கப்படுமென தெரிவித்து ஆனால் இவ் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.  இரண்டாவது மாகாண சபைத்  தேர்தலின் பிறகு கல்குடா பிரதேசத்தில்  நிகழ்வொன்றுக்கு இரண்டரை வருடங்களுக்கு முன் நிகழ்வொன்றுக்கு வருகைதந்த அமைச்சர்  பசில் ராஜபக்ச அவர்கள் கல்குடா பள்ளிவாசல்கள் சம்மேளணத்திடமும்  முன்னாள் அமைச்சர் அமீர் அலிக்கு தேசியப்பட்டியல் எம்.பி பதவி வழங்கி பிரதியமைச்சாராவார். என வாக்குறுதி அளித்திருந்தார். அது இற்றைவரை நிறைவேற்றப்படவில்லை. தற்போது கிழக்கு மகாணசபையில்  எமது கட்சி 3 உறுப்பிணர்களும் தணித்து இயங்குவதென தீர்மாணத்தினை வெளியீட்டதையடுத்து  தேசியப்பட்டியல் கதை வந்துள்ளது.

எனவே கல்குடா மக்களின் ஆணையை பெற்றபின்னரே நாங்கள் இறுதியான  முடிபை எடுப்போம்  என சுபைர் தெரிவித்தார்.  இதேவேளை இன்ரோ அல்லது நாளை அமிர் அலி கல்குடாவுக்கு விஜயம் செய்து  பள்ளிவாசல்கள் சம்மேளத்தினதும் தனது எம்.பி பதவி குறித்து அறிவிப்பு தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது. இச் சந்திப்பில் அ.இ.ம.காங்கிரசின் தலைவர் றிசாத் பதியுத்தீனும் பங்கேற்பார் எனவும் பெரிதும் நம்பப்படுவதாக சுபைர் தெரிவித்தார்.  

Share it:

Post A Comment:

0 comments: