''மஹிந்த ராஜபக்ஷ இலகுவில் தோல்வியை விட்டுக் கொடுக்க மாட்டார்''- பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம்

Share it:
ad

பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களாகவே இருக்கின்றனர். எனினும் கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியுற்றாலும் அவர்கள் கணிசமான அளவு  உறுப்பினர்களைப் பெற்றுள்ளார்கள்.  ஐக்கிய தேசியக் கட்சி வாக்குகள் அளிக்கப்படுவதில்லை. அவர்கள் புறக்கணித்து வந்துள்ளார்கள். அவர்களுடைய அடிப்படை மொத்த வாக்குகள் கட்டியாக இருந்து வருகின்றது. பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேனவை ஒரு ஆட்சி மாற்றத்திற்காக வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சிப்  தெரிவித்தார்.

கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லிம் பிரிவு கூட்டம் கண்டி கட்டுகஸ்தோட்டை ரிவசைட் ஹோட்டலில் முஸ்லிம் பிரிவின் தலைவர் ஹலீம் தலைமையில் இன்று 28-11-2014 தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு தலைமையுரையாற்றி பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் அங்கு இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்

முஸ்லிம்கள் தங்களுடைய வாக்குகளை புறக்கணிப்பதை தவிர்த்து வாக்களிப்பு விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியவர்களாக உள்ளனர். குறிப்பாக முஸ்லிம்களிடத்தில் அடையாள அட்டை இல்லாதவர்களாக இன்னும் இருக்கின்றனர். இந்த அடையாள அட்டைகளை இல்லாத ஒவ்வொருவரும் கட்டாயம் பெற்றுக் கொள்ள வேண்டும். எவ்வாறு பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலை எம் முஸ்லிம் வாக்காளர்களுக்கு தெளிவு படுத்தப்பட வேண்டும். இதற்கான ஆலோசனைகளையும்  அதனைப் பெற்றுக் கொடுப்பதற்காக முயற்சிகளையும் நான் மேற்கொள்ளத் தயாராக இருக்கின்றேன். இது தொடர்பாக என்னுடன் தொடர்பு கொள்ளலாம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலகுவில் தோல்வியை விட்டுக் கொடுக்க மாட்டார். வெற்றி பெறுவதற்கு முடிந்தளவு பகீரதப் பிரயத்தனங்களைச் செய்வார். எனினும் இந்நாட்டில் சட்டம் நீதி நியாயம் ஒழுங்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதற்காக நாம் அனைவரும் பொது வேட்பாளரை ஆதரித்து அவரை வெற்றிபெறச் செய்வோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் லாபீh ஹாஜியார், பிரதேச சபை உறுப்பினர்கள்  உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இக்பால் அலி

Share it:

Post A Comment:

0 comments: