இலங்கையின் சிங்கள மக்கள் மத்தியில் வாசிக்கப்படும் பிரபல செய்தித்தாளான “ராவய” வுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அரச புலனாய்வு பிரிவு ஏற்பாடு செய்துவருகிறது.
பொய்யான தகவல் ஒன்றை வெளியிட்டமை தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
28-11-2014 இன்று வெளியான ராவய செய்தித்தாளில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன 59 வீத வாக்குகளை பெறுவார் என்று அரச புலனாய்வு பிரிவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அறிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 41வீத வாக்குகளையே பெறுவார் என்ற தகவலையும் அரச புலனாய்வு பிரிவு மஹிந்தவுக்கு அறிவித்துள்ளதாக ராவய குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த தகவலை மஹிந்தவுக்கு தெரிவித்த பின்னர் அரச புலனாய்வுப்பிரிவின் தலைவர் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி சந்திரா வாகிஸ்டா பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் ராவய தெரிவித்துள்ளது.
எனினும் இலங்கையில் அவ்வாறான ஆய்வு ஒன்றை அரச புலனாய்வுப்பிரிவு மேற்கொள்ளவில்லை என்று பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் தமது சேவைக்கு களங்கம் விளைவித்ததாக கூறி ராவய செய்தித்தாளுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாகவும் பொலிஸ் திணைக்களம் தெரிவி;த்துள்ளது
Post A Comment:
0 comments: