திருகோணமலை முஸ்லிம்கள் யாரை ஆதரிக்கப்போகிறார்கள்..?

Share it:
ad
(அப்துல்லத்தீப்  ஆர்தீன்பாபு)             

ஜனாதிபதித் தேர்தல் ஒன்;று நடைபெறுவதற்கான திகதி குறிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில்   திருகோணமலை மாவட்டத்திலுள்ள முஸ்லிம்கள் யாரை ஆதரிக்கப் போகின்றார்கள்  என்பது பற்றி அலசி ஆராய்வதே  இக்கட்டுரையின் நோக்கமாகும்.

திருகோணமலை மாவட்டமானது 11 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கியதாக மூன்று தேர்தல் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.மூதூர் தொகுதியில் 95804 வாக்காளர்களும்,திருகோணமலை தேர்தல் தொகுதியில் 86978 வாக்காளர்களும்,சேருவில தேர்தல் தொகுதியில் 74070 வாக்காளர்களும் மொத்தம் 256852 வாக்காளர்கள் 2014ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் இம்முறை வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். மூவனங்களும்  சரிசமமான தொகை வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாகும்.எனினும்  முஸ்லிம் வாக்குகளில்  பிரதான கட்சிகளான. ஐ.ம.சு.கூட்டமைப்பு, த.தே.கூட்டமைப்பு,  சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,ஐக்கிய தேசியக்கட்சி,  ஆகியவற்றுக்கு இம்மாவட்ட முஸ்லிம்கள் காலா காலமாக   வாக்களிக்கத் தவறுவதில்லை .எனினும் நிரந்தர முஸ்லிம் வாக்கு வங்கியைத் தன்னகத்தே வைத்திருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் இம்மாவட்டத்திலுள்ள பிரதேச சபை ,நகரசபை,கிழக்கு மாகாணசபை மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றில் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி பங்காளிக் கட்சியாக செயல்படுகின்றன.  

யுத்தத்திற்குப் பின்;னரான சமாதான சூழல் ஏற்பட்ட பின்னர் மகிந்த சிந்தனை கிழக்கின் உதயம் பொருலாதார அமைச்சு கமநெகும திவுநெகும அமுலாக்கள் வேலைத்திட்டத்தின் கீழ்; பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு வந்தன. ஆனால் இவ்வேலைத்திட்டங்களில் பங்காளிகாளிக் கட்சியான முஸ்லிம் காங்கிரஸ்   பெயரலவில் பார்வையாளர்களாகவே மாத்திரம் இருந்துள்ளது. ஆளும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் இவரகள் எதிலும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. தாங்கள் அரச தரப்பினரால் திட்டமிட்டுப் புறக்கனிக்கப்படுவதாக தங்களின்  மன உளைச்சள்களை   பகிரங்கமாகவே  குற்றஞ்சாட்டி வந்தனர்.

முஸ்லிம்களுக்கெதிரான பல பிரச்சினைகள் வந்த போது அதற்காக முகம்கொடுத்து  குரல் கொடுத்த போதெல்லாம் செவிடன் காதில் சங்கூதுவதைப் போன்றே அரச தரப்பினர் தட்டிக்களித்து வந்தனர். முஸ்லிம்கள்  விடயத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் நீதமாக நடப்பதில்லையென எடுத்துக் கூறப்பட்ட பொழுது இவைகள்  கிஞ்சித்தேனும் கணக்கில் எடுக்கப்படவில்லை.கிழக்கு மாகாண சபையில் 39 அமர்வுகள் நடந்தேறியுள்ளது அவ்வமர்வுகளிலெல்லாம் எதிர்க்கட்சியை விட ஆளும் தரப்பு முஸ்லிம் கா. உறுப்பினர்கள் தான் அதிகமான  கண்டணத் தீர்மாணங்களையும் அரச தரப்பு அடாவடி நடவடிக்ககைளையும் கண்டித்து விமர்சித்துள்ளனர. இதனைக்கட்சித் தலைமைப் பீடமும் நன்கு அறிந்து வைத்திருந்தது.. யுத்தத்திற்குப்பின்னரான சமாதான சூழலில்  முஸ்லிம்களுக்கெதிராக தொடுக்கப்பட்ட நிழல் யுத்தம் திருகோணமலை மாவட்டத்திலும் அரங்கேற்றப்பட்டது.   வேண்டுமென்றே முஸ்லிம்களைச் சீண்டும் பல சம்பவங்கள்  ஆங்காங்கே நடந்தேறியது.

திருகோணமலை பட்டணமும் சூழல் பிரதேசத்திலுள்ள வெள்ளை மணலில் 1837 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மிகப்பழைமை வாய்ந்த கருமலையூற்று மஸ்ஜிதுல் ராபியா  பள்ளிவாசல் உயர் பாதுகாப்பு வலயத்தில்  படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இது திடட்மிட்டு உடைக்கப்பட்ட போது முஸ்லிம்கள் கொதித்தெழுந்தார்கள்  ஆனால் பொறுப்பு வாய்ந்த சில அரசியல் தலைமைகள் அதிகாரிகள்  பள்ளிவாசல் மீள் நிர்மாணம் செய்து தருவோம் என வாக்குறுதி அளித்ததனால் முஸ்லிம்கள் பொறுமையடைந்தனர். கன்னியா வெந்நீர் ஊற்று மலையில் அமையப்பெற்ற 40 அடி நீளமுள்ள ஹாஜாமுகைதீன் அவ்லியா ஷியாரத்தை 1960 ஆம் ஆண்டு காலப்பகுதி முதல் வருடாவருடம் அணைத்துக்கிராம முஸ்லிம்களும் இணைந்து கந்தூரி அன்னதானம் கொடுப்பது வழமை. யுத்தம் முடிவடைந்த பின்னர்  உயர்பாதுகாப்பு வலயம் என்ற காரணத்தினால் இங்கு முஸ்லிம்கள் சென்று தரிசிக்க  முடியாது தடை விதிக்கப்பட்டுவிட்டது.

 மூதூரில்; பெரும்பாண்மை முஸ்லிம்கள் வாழும் பிரதேசம் சிங்கள சகோதர சமூகம் வாழாத ஜபல்மலையில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டது முஸ்லிம்களின் மனதைப் புன்பட வைத்தது. குச்சவெளி கரடிமலைப்பிரதேசமும் இவ்வாறுதான்.தொல் பொருள் அடையாளம் சின்னங்கள் இருக்கின்றன ; சூழவுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளில் இங்கு குடியேற விடாது தடுக்கப்பட்டு முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் பௌத்த யாத்திரிகள் தங்குவதற்கான விடுதியும் கட்டப்பட்டது.அத்தோடு உள்ளாச விடுதியாக இருந்த அரச நிலப் பகுதியில் விகாரையொன்றும் கட்டப்பட்டுள்ளது. இவ்விடயம்  நீதி மன்றத்தில் வழக்கிலுள்ளது. 1990ம் ஆண்டு யத்தத்தில் வெளியேறிய இளந்தைக் குளத்து முஸ்லிம்கள்  மீளக்குடியேற முற்படுகையில் பல்வேறு தரப்பினர் இடையூறு செய்து தடுக்கப்பட்டது.  

குச்சவெளி பிரதேச செயலகத்தில் முஸ்லிம்களின் 9ஆயிரம்  காணி ஆவணம் கோரிய விண்ணப்பம் கவனிப்பாரற்றுக்கிடக்கிறது.புல்மோட்டை அரசி மலைப்பிரதேசத்தில் 500 ஏக்கர் நிலம்    தொல்பொருள் அடயாளம் இடப்பட்டு காணி  பௌத்த விகாரைக்கு; சிங்கள குடியேற்றத்துக்குமென  மக்கள் குடியிருப்புக்காணிகள் அளவீடு செய்யப்பட்டுள்ளன.  புல்மோட்டைக் கனிய மணல் கூட்டுத்தாபன வேலைவாய்ப்பில்  உள்ளுர் இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டு வெளிமாவட்ட தொழலாளர்களுக்கான  வெற்றிடம் நிறப்பப்படுகின்றன.

இலாபத்தின் பெரும்பகுதி வெளிமாவட்ட அபிவிருத்திக்கென ஒதுக்கப்படுகிறது; உள்ளுர் அபிவிருத்தி புறக்கனிக்கப்படுகிறது.  இறக்கக்கண்டி மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு கைகொடுத்து வந்த பெரிய கரச்சி கலப்பு நிலம் 1805 ஏக்கர் தனியார் கம்பனி றைகமுக்கு உப்பு விளைச்சளுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.இதனால் தொழில் இளந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் தவிக்கின்றனர். கிண்ணியாவின்; முஸ்லிம் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வரவேற்பு மகுடத்தின் கட்டிட நிர்மாண வேலை இடை நிறுத்தப்பட்டது. குரங்கு பாஞ்சான் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை இவ்வாறான பல பிரச்சினைகளுக்கு முஸ்லிம்கள் முகம் கொடுத்துள்ள நிலையில்தான்    ஜனாதிபதித் தேர்தலில் திருகோணமலை  மாவட்ட முஸ்லிம்கள்   யாரை ஆதரிப்பது யாரை நிராகரிப்பது என்பதில் குளப்பமடைந்துள்ளார்கள்.   இவ்வாறாக மக்கள் இளந்துள்ள பிரச்சினைகளை ஜனாதிபதி வேற்பாளர்களின் முன் நிறுத்தி திருகோணமலை மாவட்ட முஸ்லிம்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
Share it:

Post A Comment:

0 comments: