(அஷ்ரப் ஏ. சமத்)
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையில் கொழும்பு கைக் பார்க்கில் முதலாவது கொழும்பு அமர்வு- எதிர்கட்சிகளின் பொதுவேற்பாளர் மைத்திரிபாலசிறிசேனாவின் முதலாவது மாபெரும் மக்கள் சந்திப்பு 2ஆம் திகதி பி.பகல் 3மணிக்கு நடைபெறவுள்ளது. மேற்படி அறிவித்தலுக்குரிய போஸ்டர் கொழும்பு முழுவதிலும் ஒட்டப்பட்டுள்ளது. இம் மைதாணம் கொழும்பு மாநகர சபையின் கீழ் உள்ள மைதாணமாகும்.
இதில் மாதுலுவாவே சோபித்த தேரர், மைத்திரிபாசிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க,ஜே.வி.பி அனுரகுமார திசாநயாக்க, ரணில் விக்கிரமசிங்க, ரீ.என்.ஏ சுமந்திரன், மனோகணேசன், சரத் பொண்சேகா மற்றும் ஏனைய கட்சிகள் தொழிற்சங்க பிரதிநிதிகள் உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏகாதிபத்திய ஜனாதிபதிமுறை குடும்ப ஆட்சி, இராணுவ ஆட்சி, பொதுசொத்துக்கள் சுரையாடுதல் போன்ற பல்வேறு தலைப்புக்களில் இந் நிகழ்வு நடைபெறவுள்ளதாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
Post A Comment:
0 comments: