புகைப்பிடித்தல் சம்பந்தமாக வர்த்தமானி அறிவித்தலை கொண்டு வந்த காரணத்தினால் அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு தான் சகித்து கொள்ள முடியாத பாத்திரமாக மாறியதாக முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இன்று 27-11-2014 நடைபெற்ற ஐக்கிய மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
புகையிலை மற்றும் புகைத்தல் சம்பந்தமாக நான் கொண்டு வந்த வர்த்தமானி அறிவித்தலை பலர் எதிர்த்தனர்.
நான் கொண்டு வந்த இந்த யோசனையால் நாட்டுக்கு வெள்ளையர்கள் வர மாட்டார்கள் என அரசாங்கத்தில் உள்ள சிலர் கூறினர்.
சிகரட் பைக்கட்டுகளில் 80 வீதமான எச்சரிக்கைப்படம் பொறிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் 60 வீதமான குறைய காரணம் என்ன?. எதிர்காலத்தில் சிகரட் பைக்கட்டுகளில் 90 வீதம் எச்சரிக்கை படத்தை பொறிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சேறுபூசும் பிரசாரங்களுக்கு நான் பயப்பட போவதில்லை. பல வருட அரசியல் வாழ்க்கையில் அது எனக்கு பழக்கமானது.
புதிய அரசியல் கலாசாரத்தை நாட்டிற்குள் ஏற்படுத்துவதற்காக பொது வேட்பாளராக தன்னை நிறுத்துவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு நன்றிகனை தெரிவித்து கொள்கிறேன் எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
Post A Comment:
0 comments: