அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு சார்க் வலய நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
சார்க் மாநாட்டின் இறுதி அமர்வுக்கு முன்னதாக நடைபெற்ற அங்கத்துவ நாடுகளின் தலைவர்களுடனான இருதரப்பு கலந்துரையாடலின்போதே ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்கள் ஐவருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தமைக்காக ஒட்டுமொத்த இந்தியாவினதும் பாராட்டுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பாத்திரமாகியுள்ளதாக இந்திப் பிரதமர் நரேந்தி மோடி குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திரா மற்றும் தமிழக சிறைகளில் உள்ள இலங்கை மீன்வர்களை விடுதலை செய்யுமாறு இதன்போது ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷரீபுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது யுத்த காலத்தில் பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டுளளது.
பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு இரண்டு நாடுகளும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கான இராஜதந்திர விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு இதன்போது பாகிஸ்தான் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
Post A Comment:
0 comments: