யுத்தத்தை நிறுத்தவே கோதபாயவை அழைத்துவந்தேன், பசில் + சமலை நான் அழைத்து வரவில்லை

Share it:
ad
யுத்தத்தை முடிவுறுத்தவே கோதபாய ராஜபக்ஸவை அழைத்து வந்தேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மக்களும் பண்டாரநாயக்கக்களுமே பெசில் ராஜபக்ஸ மற்றும் சமால் ராஜபக்ஸ ஆகியோரை அரசியலில் களமிறக்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

1977ம் ஆண்டு முதல் முதலாக சிறிமாவோ பண்டாரநாயக்க, பெசில் ராஜபக்ஸவிற்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

சிரிமவோ பண்டாரநாயக்க மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோரே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் பெசில் ராஜபக்ஸவை உள்ளடக்கியதாகத் தெரிவித்துள்ளார்.

சிரிமாவோ பண்டாரநாயக்கவே, சமால் ராஜபக்ஸ பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட முதலில் வாய்ப்பு வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பெசில், சமால் ஆகியோரை தாம் அரசியலிலுக்குள் அழைத்து வரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தை முடிவுறுத்த நம்பிக்கையான ஒருவரிடம் பாதுகாப்புச் செயலாளர் பதவியை ஒப்படைக்க வேண்டியேற்பட்ட போது, கோதபாய ராஜபக்ஸவை தாம் அழைத்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை மீளவும் பின்நோக்கி நகர்த்த இடமளிக்கப்பட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் புத்திசாதூரியமானவர்கள் எனவும் சரியான தீர்மானங்களை எடுப்பார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் சென்ற சூழ்ச்சித் திட்டத்தின் பின்னணியில் சந்திரிக்கா செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.
Share it:

Post A Comment:

0 comments: