ஜனாதிபதி தேர்தலின் நடைபெற போவது என்ன..? முன்னாள் பிரதமருடைய மகனின் ஆருடம்

Share it:
ad
எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நடத்தப்பட உள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் இலங்கை சென்றுக்கொண்டிருக்கும் பயணம் முற்றாக நல்ல நிலைமைக்கு வரும் அல்லது முற்றாக கெடுதியான நிலைமைக்கு செல்லக் கூடும் என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவானாலும் மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாக தெரிவானாலும் திருடர்களுடன் ஆட்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதால், தேர்தல் முறையில் மாற்றங்களை செய்யவில்லை என்றால், நாடு முற்றாக அழிவை நோக்கி தள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரத்ன ஆகியோர் அரசாங்கத்தில் இருந்து விலகிய நேரத்தில் தன்னிடம் கோப்புகள் இருப்பதாக ஜனாதிபதி கூறியது தவறானது.

எந்த நபராவது தவறு செய்திருந்தால், அவர் அரசாங்கத்தில் இருக்கும் போதே அது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் விதுர விக்ரமநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share it:

Post A Comment:

0 comments: