எதிரணியின் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதி தேர்தலுக்கான முதலாவது பிரச்சார கூட்டம் பொலன்னறுவை நகரில் இன்று 30-11-2014 நடைபெற்றது. இதன்போது மைத்திரிபால சிறிசேனா ஆற்றிய உரை
நாளையும் நாளைமறு தினமும் எம்மோடு இன்னும் பலர் இணைந்து கொள்ளவுள்ளனர். நான் மஹிந்தவிற்கு துரோகம் செய்யவில்லை. அவருடைய ஆட்சி முறைக்கே துரோகம் செய்தேன். என் மீது பலர் புலி முத்திரை குத்த பார்க்கின்றனர். எம்மோடு இணைந்துள்ளவர்களுக்கு சுயாதீனமாக செயற்பட முடியாத நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இல்லாதொழிக்க வேண்டும்.நான் ஜனாதிபதியாக வந்தால் மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுத்த அபிவிருத்தி நடவடிக்கைகள் நிறுத்தமாட்டோம் ,அதனையும் நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதோடு அதற்கு மேலான பல அபிவிருத்தி திட்டங்களையும் எமது அரசாங்கத்தில் முன்னெடுத்துச் செல்வோம்.
எமது தேர்தல் பிரச்சாரத்தில் எந்தவொறு பதாகைகள் .பொலீத்தின் மற்றும் கட்அவுட்கள் பயன்படுத்தப்படமாட்டாது. அதற்காக செலவிடும் பணத்தை நாம் வரிய விவசாயிகளுக்கு வழங்கவுள்ளோம்.
மஹிந்த ராஜபக்ஷவின் கட்அவுட்கள் பல இடங்களில் பிரச்சாரத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. இதற்கு கோடி கணக்கில் செலவிடப்படுகின்றது.



Post A Comment:
0 comments: