பொது வேட்பாளராக போட்டியிடுவதிலிருந்து மைத்திரிபால சிறிசேன உடனடியாக விலகிக்கொள்ள வேண்டுமென அமைச்சர் விமல் வீரவன்ஸவின் தேசிய சுதந்திர முன்னணி வலியுறுத்தியுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக போட்டியிடுவதில் இருந்து விலகி தனது சகோதரரின் அரிசி ஆலையில் அரிசி குத்திக்கொண்டோ அல்லது மண் அகழ்ந்து கொண்டோ வாழ்வது நாட்டுக்கு மிகப் பெரிய நன்மையாக அமையும் என அந்தக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க கூறியுள்ளார்.
மேற்குலக சார்பு கொண்ட சதிகாரர்களுடன் கூட்டு சேர்ந்துள்ள சிறிசேன, இன்று நாட்டுக்கு அரசியல் மனித வெடி குண்டை கொண்டு வந்துள்ளார். விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்த நாட்டில் உருவாகும் இவ்வாறான அரசியல் சதிகார மனித வெடி குண்டை வெடிக்கச் செய்து மீண்டும் நாட்டை அராஜக நிலைக்குக் கொண்டு செல்ல நாட்டில் உள்ள முற்போக்கு சக்திகளும் தேசிய சக்திகளும் எந்த விதத்திலும் இடமளிக்கப் போவதில்லை எனவும் விஜேநாயக்க கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
Post A Comment:
0 comments: