பொதுபல சேனாவின் ஆதரவு கிடைக்காமை கவலையளிக்கவில்லை என எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவளிப்பதாக பொதுபல சேனா அறிவித்துள்ளது.
பொதுபல சேனா இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த நினைத்து கூட பார்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனாவின் ஆதரவு தமக்கு தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுபல சேனா இயக்கம் யாருக்கு சொந்தமானதோ அங்கேயே சென்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
Post A Comment:
0 comments: