ஜனாதிபதித் தேர்தல் களம் சூடுபிடித்த நிலையில் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற நிலையும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற முடிவை முஸ்லிம் மக்கள் ஒவ்வொருவரும் தீர்மானித்து விட்டார்கள். எனினும் முஸ்லிம்கள் இந்த தேர்தல் காலங்களில் மிக நிதானமாக சிந்தித்து நடக்க வேண்டிய தருணம் என்று தைபா கல்வி மற்று சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வான் மதனி எம். ஏ. தெரிவித்தார்
அவர் தொடர்ந்து தம் கருத்தைத் தெரிவிக்கையில்,
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலால் இலங்கையின் வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களாக வாழ்ந்து வரும் நாம் இந்த மண்ணில் நல்லதைiயே விதைத்துள்ளோம்.
இந்த நாட்டின் கல்வி, கலாசாரம், மற்றும் பொருளார முன்னேற்றத்திற்கு காத்திரமான பங்களிப்பினை வழங்கி இருப்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த நாட்டின் வரலாற்றில் பயங்கரவவாதம் தலைவிரித்தாடிய போதும் நமது சமூகம் பல இன்னல்களை அனுபவித்தது. ஆயுதம் ஏந்தும் காலம் வந்தும் ஆயும் ஏந்திப்போராடவோ, அல்லது தனிநாட்டுக்கோரிக்கையே முன்வைத்ததில்லை.
ஏன் இந்த அரசின் இறுதி காலங்களில் ஏற்பட்ட பொது பல்லா சேனா அமைப்பினர் போன்ற பொளத்த தேரவாத சக்தியினால் முகம் கொண்ட அனைத்து விதமான பிரச்சினைகளையும், பொறுமை, சகிப்புத்தன்மை என்;ற அணிகலன்கள் மூலமே நடந்து கொண்டனர்.
நிதானமாக சிந்திக்க வேண்டிய தருணம்.
இலங்கை நமது நாடாகும். அதற்கு எவ்வித ஆபத்துக்களும் வரக்கூடாது என்பதில் முஸ்லிம்களாகிய நாம் கவனாக இருப்பதோடு அதன் அரசியல் விவகாரங்களை மிகவும் நிதானமாகவும், தீர்க்கதரிசனமாகவும் கையாள வேண்டு;ம்;. நமது நடவடிக்கைகள், அரசியல் விவகாரங்கள் நம்மையோ நமது சமூகத்தையோ பாதிக்கின்றவைகளாக இருக்குமானால் அது நாம் நமக்கும் நமது சமூகத்திற்கு இழைக்கின்ற மிகப் பெரும் துரோகமாகும்.
பொறுப்பிள் உள்ளோர் மீதுள்ள கடமைகள்
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர்களாக இருக்கின்ற ஒவ்வொரு முஸ்லிமும் குறிப்பாக உலமா சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், தொண்டர்கள், கல்விமான்கள் அனைவரும் இந்த நாட்டில் நடை பெறவிருக்கின்ற தேர்தல் பற்றிய கருத்தக்களை முஸ்லிம் சமூகத்திற்கு முன்வைக்க வேண்டிய தேவைப்பாடு உடையவர்களாக இருக்கின்றனர்.
كُلُّكُمْ رَاعٍ فَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ فَالْأَمِيرُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ ))صحيح البخاري((
நீங்கள் ஒவ்வொரு பொறுப்பாளர்கள், அவர் அவரது பொறுப்பு பற்றி விசாரணை செய்யப்படுவார், மக்களுக்கு தலைவராக இருப்பவரும் பொறுப்பாளர் ஆவார். அவர் அவர்கள் விஷயமாக கேட்கப்படுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியள்ளார்கள். (ஆதார நூல் புகாரி)
பொறுப்பில் உள்ளவர்;கள் தமது சமூகத்திற்குரிய கடமைகளை நிறைவேற்றுவதாகக் கூறி அல்லாஹ்விடம் ஒப்பந்தம் செய்தவர்கள் போன்று அரங்கிற்கு வந்தபின்னால் தமது விருப்புக்களுக்கு முன்னுரிமை வழங்கி தன்னை நம்பிய சமூகத்திற்கு மோசடி செய்யும் நிலையை நிறைய அவதானிக்க முடிகின்றது. அவர்கள் பின்வரும் நபிமொழியில் காணப்படும் எச்சரிக்கை வாசகத்தை கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.
مَا مِنْ عَبْدٍ يَسْتَرْعِيهِ اللَّهُ رَعِيَّةً يَمُوتُ يَوْمَ يَمُوتُ وَهُوَ غَاشٌّ لِرَعِيَّتِهِ إِلَّا حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ (صحيح مسلم )
எந்த ஒரு அடியானுக்கு அல்லாஹ் ஒரு (சமூகத்தின்) பொறுப்பை வழங்கி, அவர் அவர்களுக்கு மோசடி செய்தவராக மரணிப்பாராயின் அவர் மீது அல்லாஹ் சுவனத்தை ஹராமாக்கிவடுவான் என நபி (ஸஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (ஆதார நூல்: முஸ்லிம்)
இலங்கை முஸ்லிம்கள் நிதானமாக நடக்க வேண்டிய தருணம்
இரு பக்கத்தின் மத்தாளமாக மாறிவிட்டு நமது சமூகம் தனது அரசியல் விடயத்தில் அநாதையாக இருப்பதை நினைத்து மனம் வேதனைப்படுகின்றது. சென்ற காலங்களில் அரசாங்கத்தை அமைப்பதில் பிரதான பங்காளியாக விளங்கி இந்த சமூகத்தின் நிலையை பார்க்கின்ற போது சில போது அழுகைதான் வருகின்றது.
வட கிழக்கு முஸ்லிம்கள் எதில்காலத்தில் மலையக மற்றும் ஏனெய பிரதேச முஸ்லிம்கள் போன்று பாராளுமன்ற அங்கத்துவம் அற்றவர்களாக மாறி தமது உரிமைக்குரல்ளை இழந்துவிடுவார்களோ என்று எண்ணும் அளவு நிலைமை மிக மோசமாக என்னைப் பொறுத்தவரை தென்படுகின்றது. (அல்லாஹ்வே போதுமானவன்) எது எப்படியோ படைத்தவனின் விதியால் நடப்பதை நம்மால் தடுத்து நிறுத்தவும் முடியாது.
வரப்போகும் ஏழாவது ஜனாதிபதித் தேர்தலை நிதானமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். இருவரும் பௌத்த சமயத்தவர்தாம். அவர்களில் யார் நமது கலாசாரத்திற்கு அதிகம் பங்களிப்புச் செய்வாரோ அவரையே நாம் பொதுவாக ஆதரிப்போம். அது அவரது ஆட்சியின் இறுதிவரை நீடிக்குமா? என்பதுதான் கேள்வியாக உள்ளது.
நாம் அவர்களில் யாரையும் புகழவோ, இகழவோ வேண்டிய அவசியம் இல்லை. நமது உரிமைகளைத் தந்து இந்த நாட்டில் நம்மை நிம்மதியாக வாழவழி செய்வார்கள் என்று காண்போரை நாம் ஆதரிக்கலாம். பின்வரும் நபி மொழியை கொஞ்சம் படியுங்கள்.
ரோமாபுரி கிரிஸ்த மக்களைப் பற்றிக் குறிப்பிட்ட நபி (ஸல்) அவர்கள் அவர்களிடம் இருக்கின்ற முக்கியமான நான்கு பண்புகள் பற்றியும் இன்னும் சில பண்பாடுகள் பற்றியும் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.
إِنَّ فِيهِمْ لَخِصَالًا أَرْبَعًا إِنَّهُمْ لَأَحْلَمُ النَّاسِ عِنْدَ فِتْنَةٍ وَأَسْرَعُهُمْ إِفَاقَةً بَعْدَ مُصِيبَةٍ وَأَوْشَكُهُمْ كَرَّةً بَعْدَ فَرَّةٍ وَخَيْرُهُمْ لِمِسْكِينٍ وَيَتِيمٍ وَضَعِيفٍ وَخَامِسَةٌ حَسَنَةٌ جَمِيلَةٌ وَأَمْنَعُهُمْ مِنْ ظُلْمِ الْمُلُوكِ (صحيح مسلم)
அவர்களிடம் நான்கு பண்புகள் காணப்படும்.
1- அவர்கள் குழப்பங்களின் போது மிகவும் நிதானமானவர்களாக இருப்பார்கள்.
2- ஒரு சோதனையின் பின்னர் மிக அவசரமாக விழித்துக் கொள்வார்கள்.
3- போரில் புறமுதுகிட்டுச் சென்றாலும் உடன் மீண்டும் அதற்காக தயாராகிவிடுவார்கள்.
4- அவர்;களில் சிறந்தவர்கள் வறியோர், அநாதை, நலிவுற்றோர் ஆகியோருக்கு நன்மை செய்வோராக இருப்பர்.
5- ஐந்தாவது அழகிய பண்பாடு.
6- மேலும் அவர்கள் அரசர்களின் அநீதியைத் தடுத்து நிறுத்துவர்களாக இருப்பர்.
(ஆதார நூலகள் : முஸ்லிம், அஹ்மத்)
இக்பால் அலி


.jpg)
Post A Comment:
0 comments: