துமிந்த நாகமுவ, ஜனாதிபதி தேர்தலில் குதிக்கிறார்

Share it:
ad

இடதுசாரி கட்சியின் பொது வேட்பாளராக முன்னிலை சோசலிசக் கட்சியின் துமிந்த நாகமுவ போட்டியிட உள்ளதாக அந்த கட்சியி்ன பிரசார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார்.

கொழும்பில் இன்று 27-11-2014  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.

இடதுசாரி கட்சிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவில் துமிந்த நாகமுவை வேட்பாளராக நிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

நீண்டகால பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் மாற்று வேட்பாளரை நிறுத்துவது என இடதுசாரி கட்சிகள் தீர்மானித்துள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவும் போட்டியிட உள்ளனர்.

ஆரம்பத்தில் கொள்கை ரீதியான காரணங்களின் அடிப்படையிலேய ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விவாதம் இருந்தது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தொடர்பான பேச்சுவார்த்தையில் நாங்களும் பங்கேற்றோம். ஆனால் பின்னர் அது வேட்பாளர் தொடர்பான விவாதமாக மாறியது.

இதனடிப்படையில், மகிந்தவுக்கு மூன்று முறை முடியாது, பொது வேட்பாளர் யார், ரணிலா?. இடதுசாரிகளின் பொதுவேட்பாளர் தோழர் குமார் குணரட்னமா? போன்ற கேள்விகள் தான் முன்வைக்கப்பட்டன.

தற்போது அரசாங்கம் ஏகாதிபத்திய எதிர்ப்பு பற்றி பேசுகிறது. ஆனால், அரசாங்கம் ஏகாதிபத்தியவாதிகளின் தேவைக்காக கொழும்பு நகரில் வாழ்ந்த ஆயிரக்கணக்காக நகர தொழிலாளர்களை விரட்டியது. இலங்கையை சர்வதேச ஏகாதிபத்தியவாதிகளின் பொறியாக மாற்றியது.

2006 ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவத்தின் பயிற்சிக்காக துறைமுகங்களை வழங்க இணக்கத்திற்கு வந்து ஏகாதிபத்திய வேலைத்திட்டத்தை நாட்டுக்குள் செயற்படுத்திக்கொண்டு ஏகாதிபத்திய எதிர்ப்பை உருவகித்து காட்டுகின்றனர்.

எதிர்க்கட்சி ஜனநாயகம், நல்லாட்சி போன்ற விடயங்கள் பற்றி பேசுகிறது. 80 ஆம் ஆண்டுகளின் இறுதியில் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளை கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்நோக்கி ரணில் விக்ரமசிங்க இதனை பேசுகிறார்.

1994 ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிய ஒழிப்பதாக எழுத்து மூலம் உறுதி வழங்கிய சந்திரிக்கா ஜனநாயகம் பற்றி பேசுகிறார் எனவும் புபுது ஜாகொட மேலும் தெரிவித்துள்ளார்.
Share it:

Post A Comment:

0 comments: