(Vi)
ஈராக் அணு நிலையத்தை இஸ்ரேல் தாக்கியதற்குப் பழிவாங்கும் விதமாக இஸ்ரேலின் அப்போதைய பிரதமர் மெனகிம் பெகினைக் கடத்த சதாம் உசைன் திட்டமிட்டார் எனச் செய்தி வெளியாகியுள்ளது.
1980-ஆம் ஆண்டில், ஈராக் தலைநகர் பக்தாத் அருகே துவையித்தில் உருவாக்கப்பட்டு வந்த அணு நிலையத்தை இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசி அழித்தன. அந்த அணு நிலையத்தில் ஆயுதங்கள் தயாரிக்கும் திட்டமில்லை என இராக் கூறியபோதிலும், அது அழிக்கப்பட்டது சர்வதேச அளவில் கண்டனத்துக்குள்ளானது.
இந்நிலையில், இச்செயலுக்காக இஸ்ரேலைப் பழிவாங்க, ஈராக் அதிபர் சதாம் உசைன் திட்டமிட்டதாக அவரது சட்ட ஆலோசகராக இருந்த பதி ஆரிஃப் என்பவர் எழுதியுள்ள சுயசரிதையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அல்-குதுஸ் அல்-அரபி நாளிதழ் வெளியிட்டிருக்கும் செய்தியில் மேலும் தெரிவித்துள்ள விவரம்:
இஸ்ரேல் பிரதமரைக் கடத்தும் பணி பாலஸ்தீன போராளிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக, ஈராக் உளவுத் துறை அதிகாரியொருவர் ஆரிஃபிடம் தெரிவித்தார். ஆனால் மேற்கத்திய நாட்டுத் தலைவர் ஒருவரின் தலையீட்டால் இந்தத் திட்டத்தை சதாம் கைவிட்டார் என்று ஆரிஃப் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேஸ் பிரதமரைக் கடத்தும் திட்டத்தைக் கைவிடச் செய்த மேற்கத்திய நாட்டுத் தலைவர் யார் என்பது குறிப்பிடப்படவில்லை.
Post A Comment:
0 comments: