இலங்கையில் ஓய்வுபெற்ற, ஜனாதிபதிகள் பெறும் சிறப்பு சலுகைகள்

Share it:
ad
-vi-

நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தோல்­வியை ஏற்றுக் கொண்டு சுய­மா­கவே அலரி மாளி­கையை விட்டு வெளி­யே­றினார்.

அவ­ரு­டைய வெளி­யேற்றம் மிகவும் கவ­லைக்­கு­ரி­ய­தாக இருந்­தது. அதற்கு கார­ண­மாக இருந்­தது. இதற்கு முன்பு அதி­கா­ரத்தில் இருந்த எந்­த­வொரு ஜனா­தி­ப­தியும் தோல்­வி­யுற்று ஜனா­தி­பதி ஆச­னத்தில் இருந்து வெளி­யே­றா­த­மை­யாகும்.

எழு­பத்­தெட்டாம் ஆண்டு அர­சியல் அமைப்பின் 18ஆவது திருத்­தத்­துக்கு முன்பு அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் ஜனா­தி­பதி ஒருவர் இரண்டு தடவைகள் மாத்­தி­ரமே ஜனா­தி­பதி பத­வியில் இருக்க முடியும். அத­னா­லேயே ஜனா­தி­பதி பத­வியில் இருந்த ஜே.ஆர். ஜய­வர்த்­தன, டி.பி. விஜே­துங்க மற்றும் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க ஆகியோர் ஜனா­தி­பதிப் பத­வியில் இருந்து ஓய்வு பெற்று சென்ற பின் மீண்டும் அர­சி­ய­லுக்குள் வர­வில்லை.

என்­றாலும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ அர­சியல் அமைப்பின் 18 ஆவது திருத்தச் சட்­டத்தின் மூலம் ஜனா­தி­பதி தேர்­தலில் ஜனா­தி­பதி ஒரு­வ­ருக்கு போட்டி இட வரை­ய­றுக்­கப்­பட்­டி­ருந்த கால எல்­லையை நீக்கி விட்டார். எவ்­வாறு இருந்­தாலும் மூன்­றா­வது முறை­யா­கவும் போட்­டி­யிட்­டாலும் அவரால் பத­விக்கு வர வாய்ப்பு கிடைக்­க­வில்லை. என்­றாலும் அவ­ருக்கு அடுத்து ஜனா­தி­பதி தேர்­தலில் கலந்து கொள்­வ­தற்கு முன்பு பாரா­ளு­மன்­றத்­துக்கு செல்­வ­தற்கு தற்­போது இருக்கும் அர­சியல் அமைப்பின் பிர­காரம் எந்த தடையும் இல்லை.

தேவை­யென்று இருந்தால் இன்­றைக்கு வேண்­டு­மென்­றாலும் முன்னாள் ஜனா­தி­ப­திக்கு தேசிய பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வரை இரா­ஜி­னாமா செய்ய சொல்­வதன் மூலம் அந்த இடத்­துக்கு நிய­மனம் பெறலாம்.

எது எப்­ப­டியோ ஜனா­தி­பதி தேர்­தலில் தோல்­வி­யுற்ற முன்னாள் ஜனா­தி­பதி ஓய்வு பெற்ற ஜனா­தி­ப­தி­யாக கரு­தப்­ப­டு­கின்றார். இதற்கு முன்பு இவ்­வாறு ஓய்வு பெற்ற ஜனா­தி­ப­திகள் 3 பேர் உள்­ளனர். அவர்கள் ஜே.ஆர். ஜய­வர்த்­தன, டி.பி. விஜே­துங்க மற்றும் சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஆகி­ய­வர்­க­ளாவர்.

இவ்­வாறு தங்­க­ளது ஜனா­தி­பதி பதவிக் காலம் முடி­வுற்று ஓய்வு பெறும் ஜனா­தி­பதி ஒரு­வ­ருக்கு தங்­க­ளது வாழ் நாள் பூரா­கவும் தாங்கள் வகித்த அரச தலைவர் என்ற கௌர­வத்தை பாது­காக்கும் வகையில் ஓய்வு காலத்தை கழிப்­ப­தற்கு அர­சியல் யாப்பின் ஊடாக வழி ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

அதன் அடிப்­ப­டையில் ஓய்வு பெற்றுச் செல்லும் ஜனா­தி­பதி ஒரு­வ­ருக்கு அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்சர் ஒரு­வ­ருக்கு வழங்­கப்­படும் சலு­கைகள் கிடைக்­கப்­பெ­று­கின்­றன. அத்­துடன் அவர்­களின் விருப்­பத்தின் படி உத்­தி­யோக பூர்வ வாசஸ்­தலமொன்றை பெற்றுக் கொள்­வ­தற்கோ அல்­லது தனிப்­பட்ட வீடொன்றை பாவிப்­ப­தற்கோ அவர்­க­ளுக்கு முடியும்.

அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்சர் ஒரு­வ­ருக்கு வழங்­கப்­படும் பாது­காப்­புக்கு சம­மான பாது­காப்பு கிடைக்­கப்­பெ­று­கின்­றது. என்­றாலும் உயி­ருக்கு ஏற்­படும் அச்­சு­றுத்­தலைப் பொறுத்து பாது­காப்பில் கூட்டல், குறைவு ஏற்­ப­டலாம்.

ஓய்வு பெற்ற ஜனா­தி­பதி ஒரு­வ­ருக்கு ஓய்­வூ­திய கொடுப்­ப­ன­வொன்று கிடைக்­கப்­பெ­று­கின்­றது. இது­வரை அந்தக் கொடுப்­ப­னவு 97,500 ரூபா­வாகும். அத்­துடன் உத்­தி­யோ­க­பூர்வ காரி­யா­ல­யமும் ஊழியர் சபை ஒன்றும் கிடைக்கப் பெறு­கின்­றன.

மேலும் உத்­தி­யோ­க­பூர்வ வாகனம் மற்றும் பாது­காப்பு வாக­னமும் கிடைக்கப் பெறு­வ­துடன் எரி­பொருள் கொடுப்­ப­ன­வையும் பெற்றுக் கொள்ள உரித்­து­டை­ய­வ­ரா­கிறார். உத்­தி­யோ­கப்­பூர்வ வாக­ன­மாக கொடுக்­கப்­ப­டு­வது குண்டு துளைக்­காத வாக­ன­மாகும். ஓய்வு பெற்ற ஜனா­தி­பதி ஒரு­வ­ருக்கு அவர் பத­வியில் இருந்த காலத்தில் பய­ணங்­களை மேற்­கொள்­வ­தற்கு ஹெலி­கொப்டர் கிடைக்கப் பெறாது. அவ்­வாறு அவ­ருக்கு ஹெலி­கொப்டர் தேவை­யென்றால் அதற்­காக அவர் விமானப் படைக்கு கட்­ட ணம் செலுத்த வேண்டும். முன் னாள் அரச பிர­மு­க­ராக வெளி­நாட்டு விஜ­ய­மொன்­றுக்­காக அழைக்­கப்­பட்டால் அதற்கு தேவை­யான கொடுப்­ப­ன­வுகள் ஓய்வு பெற்­றுள்ள ஜனா­தி­பதி ஒரு­வ­ருக்கு கிடைக்கப் பெறு­கின்­றன.

மேலும் அரச விழா­வொன்றின் போது ஆச­னங்கள் ஒதுக்கும் போது ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருக்கு அருகில் ஆசனம் ஒதுக்­கப்­படும்.

1978 ஆம் ஆண்டு அர­சியல் அமைப்பின் ஏழா­வது சரத்தின் முப்­பத்தி ஐந்­தா­வது பந்­தியின் பிர­காரம் ஜனா­தி­பதி பதவி வகித்த காலப் பகு­தியில் செய்த எந்த தவ­றுக்கும் வழக்கு தாக்கல் செய்ய முடி­யாது.

ஜனா­தி­பதி பதவி வகிக்கும் போது அல்­லது ஓய்வு பெற்ற பின் அவர் மர­ணித்தால் வித­வைக்கு ஓய்­வூ­தி­யத்தில் மூன்றில் இரண்டு மற்றும் காரி­யா­லயம், காரி­யா­லய ஊழி­யர்களை தவிர ஓய்வு பெறும் ஜனா­தி­பதி ஒரு­வ­ருக்கு கிடைக்கும் சகல வரப்­பி­ர­சா­தங்­களும் கிடைக்கும்.

1978 ஆம் ஆண்டு அர­சியல் அமைப்பில் இவ்­வாறு நிபந்­த­னை­களை உள்­ள­டக்கி இருப்­பது ஓய்வு பெறும் ஜனா­தி­பதி ஒரு­வரின் கௌர­வத்தை பாது­காப்­ப­தற்­காகும்.

எவ்­வாறு இருப்­பினும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தாம் ஓய்வு பெறும் காலத்தில் மெத­மு­லன வீட்­டுக்குப் போய் ஓய்வின் சுகத்தை அனு­ப­விப்­பதே தனது விருப்பம் என ஜனா­தி­பதி தேர்தல் காலத்தில் கூறி­யி­ருந்தார். என்­றாலும் அவர் கூறி­யது போல் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மெத­மு­ல­ன­வுக்கு செல்­வாரா அவ்­வாறு இல்­லா­விட்டால் ஓய்வு பெறும் ஜனா­தி­பதி ஒரு­வ­ருக்கு கொழும்பில் கிடைக்கும் உத்­தி­யோகபூர்வ வாசஸ்­த­லத்தில் இருப்­பாரா என்­பது தொடர்­பாக எங்­களால் சொல்லத் தெரி­யாது.
ஆனால் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தனது ஓய்வு காலத்தை பாது­காப்பு கார­ண­மாக அத்­த­ன­கல்ல ஹொர­கொல்லையில் தங்­காமல் கொழும்பில் சுதந்­திர சதுக்­கத்­துக்கு அருகில் அமையப் பெற்ற வீட்டை உத்­தி­யோ­கபூர்வ வாசஸ்­த­ல­மாக தேர்ந்­தெ­டுத்துக் கொண்டார்.

சந்­தி­ரிகா குமா­ர­துங்­க­வுக்கு பொலிஸ் அதி­காரி ஒருவர் உட்­பட பாது­காப்பு அதி­கா­ரி­களின் 200 பேர் பாது­காப்­புக்­காக வழங்­கப்­பட்­டுள்­ளனர். மேலும் அவர் பதவிக் காலத்தில் இருக்கும் போது கட­மையில் இருந்த நம்­பிக்­கைக்­கு­ரிய அதி­கா­ரிகள் சிலரும் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளனர்.

இவ்­வாறே முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளான ஜே.ஆர். ஜய­வர்த்­தன மற்றும் டி.பி. விஜே­துங்க ஆகி­யோ­ருக்கும் பாது­காப்பு வழங்­கப்­பட்­டி­ருந்­தது. என்­றாலும் காலப்­போக்கில் அவர்கள் தங்­க­ளு­டைய பாது­காப்பு அதி­கா­ரி­களை குறைத்து வரை­ய­றுத்துக் கொண்­டனர்.

ஜே.ஆர். ஜய­வர்த்­தன உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­ல­மொன்றை பெற்றுக் கொள்­ள­வில்லை. அவர் ஓய்வு காலத்தை வோர்ட் பிளேஸில் அமைந்த தனது சொந்த வீட்டில் கழித்தார். ஜனா­தி­பதி பதவிக் காலத்­திலும் அவர் பிரீமார் என்ற அந்த வீட்­டி­லேயே தங்கி இருந்தார். ஜே.ஆர். ஜய­வர்த்­தன மர­ணித்த பின்னர் அவ­ரு­டைய காரி­யா­லயம் மற்றும் ஊழி­யர்கள் சபை இரத்துச் செய்­யப்­பட்­டன. என்­றாலும் ஜே.ஆரின் பாரி­யா­ருக்கு உத்­தி­யோ­க­பூர்வ வாகனம் மற்றும் பாது­காப்பு வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

அதே­போன்று கொலை செய்­யப்­பட்ட முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­சவின் மனை­வி­யான ஹேமா பிரே­ம­தா­ச­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­தலம் வழங்­கப்­பட்­டது. மற்றும் உத்­தி­யோ­கப்­பூர்வ வாகனம், பாது­காப்பும் அவ­ருக்குக் கிடைக்­கப்­பெற்­றன.

முன்னாள் ஜனா­தி­பதி டி.பி. விஜே­துங்­கவின் உத்­தி­யோ­கப்­பூர்வ வாசஸ்­தலம் மற்றும் காரி­யா­லயம் கொழும்பு 5 பெஜட் வீதியில் அமைந்­தி­ருந்­தது. அந்த காரி­யா­ல­யத்தில் 22 ஊழி­யர்கள் சேவை செய்­தனர். என்­றாலும் டி.பி. விஜே­துங்க இங்கே தங்­காமல் தனது ஊரான பிலி­மத்­தலா­வையில் உள்ள வீட்­டிலே தங்­கினார். முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளு­டைய காரி­யா­ல­யங்­கள்­, திணைக்­க­ளங்­க­ளுக்கு சம­மா­னவை. எந்­த­வொரு அமைச்­சி­னாலும் நிர்­வ­கிக்­காத இந்­த­தி­ணைக்­க­ளங்­க­ளுக்கு அரச ஒருங்­கி­ணைப்பு நிதி­யத்­தி­லி­ருந்து நிதி ஒதுக்­கப்­ப­டு­கின்­றது.

தற்­போது இந்த நாட்டில் ஓய்வு பெற்ற இரண்டு ஜனா­தி­ப­திகள் இருக்­கின்­றனர் அவர்கள் சந்­தி­ரிகா குமா­ர­துங்க மற்றும் மஹிந்த ராஜ­பக்ஷ ஆகி­யோ­ராவர்.

மஹிந்த ராஜ­பக்ஷ எதிர்காலத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவாரா இல்லையா என்று தற்போது சொல்ல முடியாது என்றாலும் அவருடைய பெயர் இலங்கையின் வரலாற்றில் எழுதப்பட்டு விட்டது. அது 30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த அரச தலைவர் என்று. அத்துடன் அவர் தேர்தலில் தோல்வியை ஏற்றுக் கொண்டு கௌரவமாக ஜனநாயகத்துக்கு தலை சாய்த்து ஜனாதிபதி ஆசனத்தில் இருந்து விடைபெற்றது அரசு ஆளும் உலக தலைவர்களுக்கு முன்மாதிரியானதாகும்.
Share it:

Post A Comment:

0 comments: