(பழுலுல்லாஹ் பர்ஹான்)
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்;பாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் இறுதி மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்று 05-01-2015 செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றது.
காத்தான்குடி குர்ஆன் சதுக்கத்தில் இடம்பெற்ற இம் மாபெரும் இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், பிரதித் தவிசாளர் எம்.ஜெஸீம், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட்,காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான பாக்கீர் ,சியாட்,அலி சப்ரி உட்பட கட்சி ஆதரவாளர்கள், பெரும் திரளான பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது 2015 ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முகவரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்; விஷேட உரை நிகழ்த்தினார்.
இக் கூட்டம் சுமார் இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகி நல்லிரவு 12.00 மணியுடன் நிறைவு பெற்றது. கூட்டம் இடம்பெற்ற பகுதிகளில் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.





Post A Comment:
0 comments: