மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு உணவு கிடைக்காது. அதேபோன்று 'குர்பானும்' கொடுக்க முடியாமல் போகும் எனத்தெரிவிக்கும் ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ.எச்.எம். அஸ்வர். அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழில் ஒருவிதமாகவும் சிங்களத்தில் இன்னொரு விதமாகவும் மிருக வதையை ஒழிக்கும் விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்;
ரிஷாத் உட்பட சுமார் 72 ஆயிரம் முஸ்லிம்கள் கடல்மார்க்கமாக கல்பிட்டிக்கு வந்து சேர்ந்த பொழுது அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தேன். மைத்திரிபால சிறிசேன முஸ்லிம்களின் எதிரியாவார். நாணயத்தின் ஒரு பக்கம் பொதுபலசேனா என்றால் மறு பக்கம் மைத்திரிபால ஆகும்.
பொலனறுவையில் முஸ்லிம் அரிசி ஆலை உரிமையாளர்களை இரவோடிரவாக அவர் விரட்டியவர். முஸ்லிம்களுக்கு பொருளாதார அழிவை அவர் கொண்டு வந்தார்.
மைத்திரிபால சிறிசேன ஒரு முஸ்லிம் விழாவுக்கும் வருவதில்லை. ஒவ்வொரு தரப்பினருடனும் வெவ்வேறுபட்ட இரகசிய ஒப்பந்தங்களை இவர் செய்துள்ளார் என்றும் கூறினார்.


.jpg)
Post A Comment:
0 comments: