யார் இந்த முகம்மது நபி (ஸல்)

Share it:
ad
-அஷ்ரஃப் முகம்மது-

உலக சனத்தொகையில் 25 வீதமாக இருக்கின்ற ஒரு சமூகம் ஒன்றாகத் திரண்டு எதிர்ப்புக் குரலை எழுப்பியிருக்கின்றது ளூ நாடுகள், பிரதேசங்கள், வேறுபட்ட சிந்தனைகள், மாறுபட்ட அரசியல் கொள்கைகள், ஒற்றுமைப்படவே இயலாத நடைமுறைப் போக்குகள் என்ற வேறுபாடுகளையெல்லாம் மறந்தும் துறந்தும் இந்த எதிர்ப்புக் குரல் மேலொங்கியிருக்கின்றது ளூ ஆண்மீக வழியிலான பிரார்த்தனை போராட்டம், அமைதி வழியிலான சாத்வீகப் போராட்டம், அமைதி மறந்த ஆயுதப் பிரயோகப் போராட்டம் அல்லது எதிர்ப்பு நடவடிக்கையென்று அந்தக் குரலின் துணிவு உச்சத்தில் நிற்கின்றது. உலகெங்குமான இந்த எதிர்ப்பொலிக்கு என்ன காரணம் என்பது இன்று எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆனாலும் அதற்குப் பின்னாலுள்ள வியூகங்கள், காய் நகர்த்தல்கள், திட்டமிடல்கள் என்ன என்பது எல்லோருக்குள்ளும் எழுகின்ற சந்தேகம் கலந்த கேள்வியாகவே உள்ளது.... 

நிந்தனை செய்தல் தொடர்தேர்ச்சியானது

இஸ்லாத்திற்கும் முகம்மது நபி (ஸல்;) அவர்களுக்கும் எதிரான நிந்தனை செய்தல் அல்லது கேவலப்படுத்தல் என்பது இன்று நேற்று உருவானதல்ல. இது தொடர்ச்சியானது. இஸ்லாத்திற்கு வெளியில் இருக்கின்ற ஒரு சமுகத்தினால் மட்டும் உருவானதுமல்ல. பல சமூகத்தவரும் அவ்வப்போது எதிர்த்துதான் வந்;திருக்கின்றனர்.  இஸ்லாத்திற்கும்; முகம்மது நபி (ஸல்;) அவர்களுக்கும் எதிரான நிந்தனை செய்தல் என்பது நீண்ட வரலாற்றுப் பின்னணியைக் கொண்டிருக்கின்றது. முகம்மது நபி (ஸல்;) அவர்கள் வாழ்ந்த காலத்திலிருந்தே அவரை நிந்தனை செய்யத் தொடங்கினார்கள். அவரை ஒரு பொய்யராக, பைத்தியக்காரராக, சூனியக்காரராக அடையாளம் காணச் செய்ய சமுத்திலிருந்த ஒரு சிறு பகுதியினர் முயன்றார்கள். மிகக் கேவலமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் பிரச்சாரம் செய்தார்கள். முகம்மது நபி (ஸல்;) அவர்களின் மறைவிற்குப் பின்னரும் சமுத்திலிருந்த சிலர் அவரின் வார்த்தைகளையும், அவர் வழியாக வந்த இறை வழிகாட்டல்களையும் நிந்தனை செய்து விமர்சிக்கத் தொடங்கினார்கள். கால ஓட்டத்தோடு இது தொடர... சிலுவை யுத்தத்திற்குப் பின்னர் இது அதிதீவிரம் அடையத் தொடங்கிற்று. இஸ்லாமிய ஆட்சித் தளங்களை வீழ்த்தியும் தோல்வியுமுறச் செய்யுமளவுக்கு அதன் தாக்கம் பெரிதாக இருந்திருக்கின்றது. உருவ வழிபாட்டை அல்லது உருவ வணக்கத்தை முழுமையாக மறுக்கின்ற இஸ்லாமிய சிந்தனைக்குள் மாற்றத்தைத் திணிப்பதற்காக முகம்மது நபி (ஸல்;) அவர்களுக்கே உருவம் கொடுத்து சித்தரிப்பது மட்டுமல்லாது, அச்சித்தரிப்பு கேலிச்சித்திரங்களாக உருவாக்கப்பட்டு இஸ்லாத்திற்கு வெளியில் இருப்பவர்களினால் வெளியிடப்பட்டு வருகின்றது. அதில் போட்டி போட்டுக் கொண்டு மேற்குல யூத, கிறிஸ்தவ சிந்தனை வட்டம் செயற்படத் தொடங்கியிருக்கின்றது. இதன் தொடர்ச்சியாகவே... இதற்கு முன் வெளியிடப்பட்டிருக்கும் திரைப்பட முன்னோட்டத்தையும் பிரான்ஸ் பத்திரிகை ஒன்றின் தொடர்ச்சியான கேலிச்சித்திரத் தொகுப்பையும் அடையாளம் காண வேண்டியுள்ளது. 

முகம்மது நபி (ஸல்;) அவர்கள் எப்படியானவர்?

உலக அளவில் எந்தக் காலகட்டத்தை எடுத்தாலும் எல்லாக் கால கட்டத்திலும், அக்காலத்தில் வாழ்ந்தவர்களின் பட்டியலுக்குள் 'சிறந்த சமூக நாகரீகத்தின் முன்னோடி' எனத் திகழ்பவர் முகம்மது நபி அவர்கள். புணைவிற்கும் மாறுபட்ட ஆண்மீகச் சிந்தனைக்கும்  அப்பால் இந்த உண்மையை ஒரு சிலரைத்தவிர்த்து ஒட்டு மொத்த உலகமுமே ஏற்றுக்கொண்டிருக்கின்றது. முகம்மது நபி (ஸல்;) அவர்கள் சிறு வயதிலிருந்தே 'அல்அமீன், அஸ்ஸாதிக் என்ற சிறப்புப் பெயர்களால் நம்பிக்கையாளர், உண்மையாளர் என்று சமுத்தினரால் அடையாளம் காணப்பட்டவர்ளூ நாகரீகப் பண்புகளை வெளிக்காட்டுவதிலும் கற்றுக் கொடுப்பதிலும் முன்மாதிரியாக இருந்திருக்கின்றார்ளூ தனிமனித ஒழுங்கு, சமுக ஒழுக்கம் இரண்டையும் இணைத்து சிறந்த சமுக நாகரீகத்தை உருவாக்கி வெற்றி கண்டவர்ளூ ஆயுதப் போராட்ட நம்பிக்கைக்கு அப்பால் தனது நல்லொழுக்கத்தினாலும் சிறந்த சமுகத்திட்டங்களினாலும் உலக வேறுபாட்டு நிலைகளை, மாறுபட்ட சிந்தனைகளை ஒருமுகப்படுத்தியவர்ளூ எல்லாவற்றிற்கும் மேலாக உயர் சமுக நாகரீகத்தையும் நல்ல தனி மனித ஒழுக்கத்தையும் கொண்டிருக்கும் பெரிய சமுதாயம் ஒன்றில் தலைமையாகப் பார்க்கப்படுகின்றவர். முகம்மது நபி (ஸல்;) அவர்களை இஸ்லாமிய சமுகத்திற்குள் இருக்கின்றவர்கள் மட்டும் 'உயர்ந்த மாமனிதர்','சிறந்த சமூக முன்னோடி' என்று சொல்லவில்லை. மாறாக இஸ்லாத்திற்கு வெளியில் இருக்கும் சாதாரணமானவர்கள் மட்டுமல்லாது புகழ் பூத்த அறிஞர்களும் முகம்மது நபி (ஸல்;) அவர்கள் இயல்பிலேயே உயர்ந்த குணங்களின் பிறப்பிடம் என்பதனை கோடிட்டுக் காட்டுகின்றனர். 

இவர்களுள் அறிஞர்  பேர்னாட்சோ முக்கியமானவர். இவர் சிறந்த மானுட நாகரீகத்தை உலகிற்குக் கற்றுக்கொடுத்த ஒருவராக முகம்மது நபியைக்  காணுகின்றார். 'முகம்மது நபி நம்முடன் இன்று இருப்பாரென்றிருந்தால் மானுட நாகரீகம் இன்று எதிர்கொள்ளும் எல்லாப் பிரச்சினைகளையும் வெற்றி கொண்டிருப்பார்' என்று எடுத்துக்காட்டியிருக்கின்றார்.  இவர் மட்டுமல்ல அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல அறிஞரான மைக்கல் எச். ஹார்ட் என்பவரும் உலகத் தலையவர்களில் அல்லது பிரசித்தி பெற்றவர்களில் முகம்மது நபி (ஸல்)தான் மிக உயர்ந்தவர் என்று நூறு பெயர் கொண்ட வரிசையில் முதலிடம் கொடுத்து விட்டு 'உலக வரலாற்றிலேயே சமயத் துறை, உலகியல் துறை இரண்டிலும் மிகவும் வெற்றிகரமாத் திகழ்ந்த மாமனிதர் முகம்மது' என்று குறிப்பிட்டுக் காட்டுகின்றார். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்திய மேதையான மகாத்மா காந்தி ' கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் இருக்கும் சிறந்த ஒருவரின் வாழ்க்கையை அறிந்திட அவாக் கெண்டேன். அது இஸ்லாத்திற்குள் இருக்கும் முகம்மது நபி (ஸல்;) அவர்கள் என்று அடையாளம் கண்டேன். நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை, தன்னைச் சாதாரணமானவனாகக் கருதும் உயர்ந்த பண்பு, வாக்குறுதியைப் பேணிக்காத்த தன்மை, தோழர்கள் மீது கொண்ட அன்பு, அஞ்சாமை, இறைவன் மீதான பிரச்சாரத்தில் கொண்ட முழு நம்பிக்கை இவைகளே அவரிடமும் அவருடைய தோழர்களிடமும் உலக சக்திகள் அனைத்தையும்   கொண்டு வந்து சேர்த்தது' என்றும் எடுத்துக் கூறி நபிகளாரின் ஒழுக்கப் பண்பு கண்டு வியப்புக் கொள்;கிறார்.

பின்புலம் என்னவாக இருக்கும்?

நிந்தனை செய்யும் திரைப்ட முன்னோட்டம் மற்றும் பத்திரிகைக் கேலிச் சித்திரம் ஆகிய சம்பவங்களுக்குப் பின்னால்... அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட திரைப்படத் தயாரிப்புக் குழு, பிரான்ஸின் ஒரு பத்திரிகைக் குழு மட்டும்தான் இருக்கின்றார்கள் என்று சொல்லி விட இயலாது.  இந்த நிந்தனைத் திட்டங்களுக்குப் பின்னால்... ஏறாலமான பின்னூட்டல்கள் இருந்திருக்க வேண்டும் என்பதனையும் இன்னும் அந்த அதிகார வலுவூட்டல்கள் இத்திட்டத்தோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு தைரியத்தையும் பாதுகாப்பையும் திரைமறைவில் கொடுத்துக் கொண்டிருக்கின்றன என்ற உண்மையையும் உணரவேண்டியதாக உள்ளது. இவ்விரு நிந்தனைத்திட்டங்களும் எதை நோக்காகக் கொண்டு செயற்படுத்தப்பட்டன? இதற்குப் பின்னாலுள்ள தாரக மந்திரம் என்னவென்பது ஆராயப்பட வேண்டிய விடயங்களாகவே உள்ளன. 

இவ்விரு நிந்தனைக்கான செயன்முறைகளும்... இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கேலிக்குள்ளாக்கி கேவலப்படுத்த வேண்டும் எனும் நோக்கோடு திட்டமிட்டுச் செயற்படுத்தப்பட்டவையாக இருக்கலாம்.  மேற்குலகில் கடவுளில்லை என்ற கொள்கை வலுவிழந்து போகின்ற நிலையில், யூதம் மற்றும் கிறிஸ்தவம் சிதைவாலும் சிந்தனை முரண்பாட்டாலும் வலுவிழந்து போகின்ற நிலையில், இஸ்லாமிய மார்க்கமும் சிந்தனையும் வலுவாக வளர்ந்து வருகின்ற சூழ்நிலையில்... இந்நிந்தனைக்கான செயற்திட்டங்கள்  வகுக்கப்பட்டிருக்கக் கூடும்! இவ்விரு நிந்தனைக்கான செயன்முறைகளும்... மத்திய கிழக்கில் இஸ்லாமிய தேசங்களை நோக்கிய மேற்குலகின் இராணுவ நகர்விற்கான சூழ்நிலைக்காக திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டவையாக இருக்கலாம். அரபுலகில் உள்நாட்டு கிளர்ச்சி ஏற்பட்டு இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு அரசியல் மற்றும் சமுக நிலைகள் சீர்குலைந்திருக்கின்ற நிலையில், மேற்குலகிற்கு அடிபணியாது இன்னும் சில இஸ்லாமிய நாடுகள் சவால் விட்டுக்கொண்டிருக்கும் நிலையில், மேற்குலகின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் இஸ்லாமிய தேசத்தின் பகுதிகளில் எதிர்ப்புணர்வு மேலும் அதிகரித்திருக்கும் நிலையில், மேற்குலகிற்கு இராணுவக் குவிர்ப்பும் இராணுவ நகர்வும் தேவைப்படுகின்ற சூழ்நிலையில்... உலக நாடுககளின் கவன மாற்றுத்திட்டமாக இந்நிந்தனைக்கான செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கக் கூடும். இவ்விரு நிந்தனைக்கான செயன்முறைகளும்... முஸ்லிம்கள் சகிப்புத் தன்மை அற்றவர்கள், தனிமனித சுதந்திரத்தை ஏற்காதவர்கள், அநாகரீகமாக நடந்து கொள்பவர்கள் என்று உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்கான நோக்கோடு திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டிருக்கலாம். 

இஸ்லாமிய நம்பிக்கையில் அல்லது முஸ்லிம்கள் உயிரிலும் மேலாகக் கருதும் முகம்மது நபி (ஸல்;) அவர்களை நிந்தனை செய்யும் போது அச்சமுகம் கொதித்தெழும் நிலையில், தமது எதிர்ப்பினை காட்டுவதற்கு அவர்கள் கையாளும் வழிமுறையினை அடையாளம் காணும் நிலையில், தமது கோபத்தையும் எதிர்ப்புணர்வின் தீவிரப்போக்கையும் காட்ட எடுக்கும் நிலையில், முஸ்லிம்கள் உணர்ச்சி வயப்படுகின்ற சூழ்நிலையில்... முஸ்லிம்கள் நாகரீகம் அற்றவர்கள் அல்லது சகிப்புத் தன்மை அற்றவர்கள் என்பதனை உலகிற்கு எடுத்துக் காட்டுவதற்காக இந்நிந்தனைக்கான செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கக் கூடும். இவ்விரு நிந்தனைக்கான செயன்முறைகளும்... முஸ்லிம் சமுகத்திற்கு பாதிப்பு அல்லது எதிர்ப்பு என்று வரும் போது... யார்? எப்புறத்திலிருந்து குரல் கொடுக்கின்றார்கள் என்பதனை அடையாளம் காண்பதற்காக திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டிருக்கலாம். 

மேற்குலகம் முஸ்லிம்களின் தீவிரவாத சிந்தனைக்குரிய தலைவன் ஒசாமா பின்லேடன் என்று அடையாளம் கண்டு... அவர் சொல்லப்படடிருக்கின்ற நிலையில், தீவிரவாத நடவடிக்கைகளுக்கான வலைப்பின்னல்கள் தகர்க்கப்பட்டிருக்கின்ற நிலையில், அடுத்த தலைமுறைக்கான தலைமை யார் என்று அடையாளம் காண வேண்டி இருக்கின்ற சூழ்நிலையில், இஸ்லாமிய சிந்தனையை நிந்தனை செய்கின்ற போது யார்? எந்தப் பக்கத்திலிருந்து குரல் கொடுக்கின்றார்கள் என்பதனை அடையாளம் கண்டு, அவர்களின் இயலுமையை வலுவிழக்கச் செய்வதற்கான திட்ட வரையிற்காக இந்நிந்தனைக்கான செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கக் கூடும்.இவ்விரு நிந்தனைக்கான செயன்முறைகளும்... மேற்குலக நாடுகளிற்கிடையிலான ஒற்றுமையையும் அவர்களுடன் இருக்கும் இஸ்லாம் மீதான எதிர்ப்பையும் மேலும் கட்டியெழுப்பும் நோக்கோடு திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டிருக்கலாம். மேற்குலக நாடுகளுக்கிடையில் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னால் முரண்பாடுகளும் கொள்கை வேறுபாடுகளும் இருக்கின்ற நிலையில், மேற்குலகம் ஆண்மீகத்தை தூக்கி எறிந்து விட்டு அறிவியலுக்குள் மூழ்கி மூச்சுத் திணறுகின்ற நிலையில், இஸ்லாமிய நாடுகளின் வளங்களைச் சுரண்டுவதிலும் கையகப்படுத்துவதிலும் மேற்குலக நாடுகள் தங்களுக்குள் போட்டி போட்டிருக்கின்ற சூழ்நிலையில், இவ்வாறான எதிர்பலையை உருவாக்கினால் சர்வதேச சமுகம் இரண்டு பிரிவாகிவிடும். அதில் மேற்குலகம் ஒன்றுபட்டு விடும். தொடர்ந்து ஒற்றுமைப்பட்ட நிலையில் இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வினை தீவிரப்படுத்த இயலும் என்ற நம்பிக்கையில் இந்நிந்தனைக்கான செயற்திட்டங்கள் வகுக்கபப்ட்டிருக்கக் கூடும்.

நடந்ததும் நடக்க வேண்டியதும் என்ன?

மேற்குலக யூத, கிறிஸ்தவத்தின்... இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் நிந்தனை செய்து கேவலப்படுத்த வேண்டும் எனும் திட்டம் நிறைவேறினாலும் இஸ்லாத்தின் வளர்ச்சியை அவர்களால் தடுத்து நிறுத்த இயலாதுள்ளது. ஏனெனில் இந்த நிகழ்வுவுகளுக்குப் பின்னர் இஸ்லாத்தையும் முகம்மது நபி (ஸல்;) அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் தேடி வாசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் வழியாக... இஸ்லாம் வளர்கிறதே தவிர அழியப் போவதில்லை.  மேற்குலக யூத, கிறிஸ்தவத்தவம்... இஸ்லாமிய தேசங்களை அண்மித்த பகுதிகளுக்கு படை நகர்தல் செய்தாலும் அவர்களை எதிர்கின்ற எண்ணத்தையும் சர்வதே ரீதியில் ஒற்றுமைப்பட்டு முழுப் பலத்தோடு போராட இயலும் என்ற நம்பிக்கையையும் இஸ்லாமிய சமுகத்திற்கு மத்தியில் உருவாக்கியிருக்கின்றது. இதன் வழியாக... இஸ்லாம்pய சமுகம் வலுவடைந்து போகின்றதே தவிர பலமிழக்கவில்லை.  மேற்குலக யூத, கிறிஸ்தவத்தின்... இஸ்லாமிய தீவிரப்போக்கு கொண்ட தலைவர்களை அடையாளம் காணும் முயற்சியும் தோற்றுப் போயிற்று. ஏனெனில் இஸ்லாமிய சிந்தனைக்கு பாதிப்பு அல்லது இஸ்லாத்திற்குப் எதிர்ப்பு என்று வருகின்ற போது சமுகத்தலைவர்கள் மட்டுமல்லாது ஒவ்வொரு இஸ்லாமியனும் தியாக உணர்வுடனும் எதிர்ப்புத் துணிவுடனும் செயற்படுவான் என்பதனை உலகெங்கும் நடந்த ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்புப் பேரணிகளும் எடுத்துக்காட்டின. இதன் வழியாக... முஸ்லிம் தலைமைகள் வலுவும் பாதுகாப்பும் பெறுகின்றதே தவிர வலுவிழப்பிற்காக அடையாளம் காணப்படவில்லை.

மேற்குலக யூத, கிறிஸ்தவத்தின்... மேற்குலக நாடுகளுக்கிடையிலான ஒற்றுமையையும் இஸ்லாமிய எதிர்ப்பையும் வலுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையையும் அரைகுறையிலேயே நிற்கின்றது. ஏனெனில்  மேற்குலகக் கூட்டமைப்பிற்குள் இஸ்லாமிய எதிர்ப்போடு பல நாடுகள் இருந்தாலும் இவ்விடயத்தில் அமெரிக்கா மட்டும் தனித்து விட்டது. பிரான்ஸும் ஒரு வகையாக மாட்டிக் கொண்டிருக்கின்றது. மேற்குலகின் ஏனைய நாடுகள் மௌனமாகவே இருக்கின்றன. இந்நாடுகளில் இஸ்லாமிய எதிர்ப்புக்கு மாறாக இஸ்லாத்தை படிக்க வேண்டும் என்ற எண்ணமே உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதன் வழியாக... இஸ்லாத்தை ஏற்பதற்கான வாய்ப்பு உருவாகின்றதே தவிர எதிர்ப்பலைகள் அதிகரிக்க வாய்ப்பில்லை. மேற்குலக யூத, கிறிஸ்தவத்தின்... முஸ்லிம்கள் நாகரீகமற்றவர்கள் வன்முறையாளர்கள் என்று சித்தரிக்க எடுத்த முயற்சி முழுமையாக வெற்றிபெற்றிருக்கின்றது எனலாம். உலகெங்கும் நடந்த ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்புப் பேரணிகளும் இதனை நிரூபிக்கும் குறிகாட்டிகளாக இருந்தன. ஏனெனில் இதுவரையில் நடாதத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், எதிர்;;பபப்புப் பேரணிகளில் பெரும்பான்மையானவை வன்முறைகளோடும் அரச சொத்தழிப்போடும் உயிரிழப்புக்களோடும் தொடர்பு பட்டவையாக உள்ளன. மேற்குலகிற்கு எதிரான எதிர்புணர்வின் உச்சத்தில் நின்று முஸ்லிம்கள் எதிர்ப்பை வெளிப்டுத்தும் போது நடந்து கொண்ட முறைகளும் உணர்வு வயப்பட்ட செய்த கருத்துப் பரிமாறல்களும் உலக நடுநிலைச்சிந்தனை வாதிகளின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. இது குறித்த இவர்களின் விமர்சனப் போக்கு மேலும் அதிகரித்திருக்கின்றது. இதன் வழியாக... இஸ்லாமிய சமுகத்தவரின் நடத்தை மற்றும் ஒழுக்கப்பண்புகள் மீது மாற்றுக் கருத்து உருவாக வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. 

எது எவ்வாறிருந்த போதிலும்... 

இஸ்லாத்திற்கும் முகம்மது நபி (ஸல்;) அவர்களுக்;கும் எதிராக நிந்தனை செய்யும் நோக்கோடு உருவான இந்தச் செயன்முறைகளானவை எவராலும் அங்கீகரித்து ஏற்றுக் கொள்ள இயலாதவை. இதனை இஸ்லாமிய சமுகம் மட்டுமல்லாது இஸ்லாத்திற்கு அப்பாலுள்ள உயர்ந்த உள்ளம் கொண்டோரும் எதிர்க்க வேண்டி உள்ளது. உண்மைக்குப் புறம்பாகவும் எதிரிடை உணர்வுகளோடும் திட்டமிட்ட கேவலப்படுத்தலோடும் உருவாக்கப்பட்டு மக்கள் மயப்படுத்தப்பட்ட சிந்தனைச் தொகுப்புக்களை எதிர்த்து இஸ்லாமிய சமுகத்தோடு இணைந்து இஸ்லாத்திற்கு வெளியில் இருக்கும் நடுநிலைப் போக்குள்ளோரும் கண்டனங்களை வெளியிட வேண்டும். ஒரு ஆண்மீக வழியை நோக்கியதான... அழைப்பாக இருந்தாலும் விமர்சனங்களாக இருந்தாலும்  அவை நாகரீகமான வழிமுறை ஊடாக முன்னெடுக்கப்பட வேணடும் என்பதில் எல்லோருக்கும் உடன்பாடு இருக்கின்றது.  நாகரீகமான கருத்துப் பரிமாற்றலுக்கான சூழலை உருவாக்குவதற்கும் அநாகரிகமான சூழலுக்கான எதிர்ப்பைக் காட்டுவதற்குமான கருத்துருவாக்கத்தினை சமுத்தில் உள்ள நடுநிலைச்சிந்தனைப் போக்குள்ள எல்லோரும் இணைந்து செய்ய வேண்டிய தேவையும் இருக்கின்றது. இதுவே காலத்தின் தேவையும் இன, மத ஒற்றுமை மற்றும் மேம்பாட்டிற்குமான வழியுமாகும்.
Share it:

Post A Comment:

0 comments: