விமல், டக்ளஸ், தினேஸ், வாசுதேவா பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவர்

Share it:
ad
தாம் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி தரப்பில் சுயாதீனமாக செயல்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் கட்சித் தலைவர்கள் சபாநாயகர் சமல் ராஜபக்சவிற்கு அறிவித்துள்ளார்கள்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தவிர்ந்த கூட்டமைப்பைச் சேர்ந்த மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, தேசிய காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயக கட்சி,  மற்றும் லங்கா சமசமாஜ கட்சி உள்ளிட்ட சில இடதுசாரிக் கட்சிகள் இன்று காலை இந்த அறிவித்தலை விடுத்துள்ளன.

இது தொடர்பாக மகஜர் ஒன்றில் கையெழுத்திட்டு சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டதாக மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

இன்று காலை சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை சந்தித்து உரையாடிய போது, அது குறித்த நடவடிக்கைகளை அவர் எடுத்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்த 57 லட்ச வாக்குகளை வழங்கிய மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்படவே இந்த நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

Share it:

Post A Comment:

0 comments: