எல்லாப்புகழும் அல்லாவுக்கே.ஆட்சியும் அதிகாரமும் அவன் நாட்டத்தின் வெளிப்பாடாகும்.இந்த ஆட்சி மாற்றமானது உளவியல் ரீதியான வலிகளில் இருந்தும், அச்சத்தில் இருந்தும் சிறுபாண்மை மக்களுக்கு நிவாரணமாக தெரிகிறது. அடக்கு முறைக்கு முகம் கொடுத்த சிறுபாண்மை சமூகத்தின் ஒரு அங்கமாகிய நாம் இந்த இடத்தில் சகோதரர் அசாத் சாலி அவர்களை விசேடமாக நினைவு படுத்துகின்றோம்.
அதிகாரத்தின் உச்சத்தை தொட்ட ஒரு அரசாங்கத்தோடு அடக்கு முறைக்கு எதிராக மோதுவது என்பது அவ்வளவு சாதாரண விடயமல்ல. சமூகத்தின் குரலாகாக தங்களை காட்டி கொண்டவர்கள் சிறைக்கு பயந்து அதையும் ஊடகங்களில் கசிய விட்ட வர்கள் மத்தியில் ஹஸ்ரத் உமர் (ரழி) அவர்களின் வீரச்சாயலை சகோதரர் அசாத் சாலி அவர்களிடம் முழு இலங்கையும் கண்டு கொண்டது. "மரணம் தலைமைத்துவத்துக்கு தலைப்பாகை" அது இங்கேயும் காணப்படது.
உரிமைக்கும் சுதந்திரத்திற்குமான பயணத்திற்காய் அரசியல் வேறுபாடுகளுக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் வெளியில் நின்று சிந்திப்பவர்களின் பிரதிபலிப்பாக உயரிய கௌரவ விருதை வழங்க தயாராகி வருகிறோம்.
மத ரீதியான நிந்தனைக்கும் ஜனநாயகத்தின் ஒடுக்கு முறைக்கும் எதிர்த்து குரல்கொடுத்த சகோதர மதத்தவர்களுக்கும் எமது உயரிய கௌரவத்தை வழங்குகிறோம்.
அல் இஸ்லாமிய ஆன்மீக அமைப்பு


.jpg)
Post A Comment:
0 comments: