புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அமைச்சரவையை நியமிக்கும் போது தகுதியானவர்களுக்கு தகுந்த இடத்தை வழங்க வேண்டும் என நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் தலைவர் மாதுளுவாவே சோபித தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனை விடுத்து மோசடியாளர்கள் அல்லது நெருக்கத்தின் அடிப்படையில் பதவிகளை வழங்கினால் மக்களின் எதிர்ப்பார்ப்பு மீண்டும் இல்லாமல் போய்விடும். பதவிகளை எதிர்ப்பார்த்து பலர் அந்த பக்கத்தில் இருந்த பக்கத்திற்கு தாவி வருகின்றனர்.
ஹெரோயின் வியாபாரிகள், கசினோகாரர்கள் போன்றவர்களுக்கு பதவிகளை வழங்கக் கூடாது. கல்வி மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களாக மிகவும் தகுதியானவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
இதற்காக அரசியலை பார்க்கக் கூடாது. தூதரக சேவைகளுக்கு உயர்ந்த தகுதியுள்ளவர்கள் நியமிக்கப்பட வேண்டும். நட்பு மற்றும் உறவு முறைகளை பார்க்காது தகுதியானவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். பழைய குப்பை அகற்றி விட்டு புதிய குப்பையை கொண்டு வர நாங்கள் இடமளிக்க மாட்டோம்.
அத்துடன் 100 நாள் வேலைத்திட்டத்தை அப்படியே செயற்படுத்துவதே புதிய அரசாங்கத்தின் பிரதான பணியாக இருக்க வேண்டும் எனவும் மாதுளுவாவே சோபித தேரர் வலியுறுத்தியுள்ளார்.



Post A Comment:
0 comments: