-GTN-
இலங்கையை ஆளுமாறு மக்கள் மகிந்த ராஜபக்சவிடம் கொடுத்துள்ளபோது அவர் நாட்டை சுமன என்ற பூசகரிடம் கொடுத்துள்ளதாக ஜே.பி.வியின் தலைவர் அனுரகுமார திஸ்ஸ நாயக்க தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையை சுற்றி கிடங்குகளை கிண்டி நெருப்பை மூட்டி யாகம் வளர்த்து தேர்தலில் வெல்ல ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது ஓர் விந்தையான செயற்பாடு என்றும் அனுரகுமார குறிப்பிட்டார். அத்துடன் குறித்த பூசகரைக் கேட்டே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும் அவர் கூறினார்.
அவரைக் கேட்டே தேர்தல் அறிவிப்பு விடுத்ததாக குறிப்பிட்ட அவர் நாட்டை மகிந்தவிடம் ஆளக் கொடுத்தால் அவர் ஓர் பூசகரை ஆளவிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மக்களின் பணத்தை கொள்ளையடித்து பிள்ளைகளின் எதிர்காலத்தை சூனியமாக்கும் மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய காலம் வந்துவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



Post A Comment:
0 comments: