மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து நான் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துவிட்டதாக எதிர்வரும் 8ம் திகதி எதிரணியினர் நிச்சயம் பொய்ப் பிரசாரம் செய்வார்கள். அவ்வாறான செயற்பாட்டை இவர்கள் செய்வார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
காரணம் வெறுமனே பொய்ப் பிரசாரங்களிலேயே இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் 8ம் திகதி ரணில் விக்ரமசிங்க பின்னுக்கு போய்விடுவார் என்பது உறுதியாகும் என்று அவர் தெரிவித்தார்.
ஒருவர் என்னிடம் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி பஷில் போய்விட்டாரா என்று கேட்டார். நான் உடனே பஷிலுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி " பஷில் நீங்கள் எங்கே போய்விட்டீர்களா" என்று கேட்டேன். அந்தளவுக்கு பொய்ப்பிரசாரம் செய்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



Post A Comment:
0 comments: