முஅத்தீன்கள் சங்கத்தின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் - படங்கள்

Share it:
ad

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய மட்டக்களப்பு, நொச்சிமுனை, பாலமுனை, காங்கேயனோடை ,ஒல்லிக்குளம், கீச்சான்பள்ளம்,சிகரம்,மண்முனை போன்ற பிரதேசங்களிலுள்ள இஸ்லாமிய பள்ளிவாயல்களில் (இறை இல்லங்களில்) இறை பணியாட்களாக பணியாற்றுகின்ற சுமார் 75 மேற்பட்ட முஅத்தீன்கள் அங்கத்தவர்களாக செயற்படும் முஅத்தீன்கள் சங்கத்தின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டம்     18-01-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை புதிய காத்தான்குடி கர்பலா வீதியிலுள்ள நூராணியா ஜூம்ஆப் பள்ளிவாயலில் இடம்பெற்றது.

முஅத்தீன்கள் சங்கத்தின் தலைவர் ஏ.எம்.ரம்ழான் தலைமையில் இடம்பெற்ற இவ் வருடாந்த பொதுச் சபைக் கூட்டத்தில் முஅத்தீன்கள் சங்கத்தின்செயலாளர் எம்.ஐ.எம்.மஜீது அதன் பொருளாளர் எம்.ஐ.எம்.காலிதீன் அதன் உப தலைவர் எஸ்.எம்.எம்.ரம்ழான் அதன் உப செயலாளர் எம்.எம்.இஸ்மாயில் உட்பட இச் சங்கத்தின் 75 மேற்பட்ட முஅத்தீன்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது பள்ளிவாயல்களில் (இறை இல்லங்களில்) இறை பணியாட்களாக பணியாற்றுகின்ற முஅத்தீன்களின் பல்வேறு பிரச்சினைகள் ஆராயப்பட்டு அதற்கான தீர்வின் முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டது.

இங்கு ஜனாசாக்களை குளிப்பாட்டுவதற்கான விஷேட குழுவொன்றும் அமைக்கப்பட்டது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திள் கீழ் பதிவு செய்யப்பட்ட இம் முஅத்தீன்கள் சங்கம் கடந்த 15 வருடங்களாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Share it:

Post A Comment:

0 comments: