பதில் கட்டுரை

Share it:
ad
-முகம்மது ஹிமாஸ் ஹிஜாஸ்-

ஒரு முஸ்லிமின் பேனா

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மாதுள்ளஹி வபரகத்துஹு 

இன்று அஷெய்க் ஷபீக் அவர்களுடைய கட்டுரையினை  வாசிக்கக் கிடைத்தேன். ஆனால் அக்கட்டுரையோடு எனக்கு எந்தவிதமான உடன்பாடும் இல்லை என்பதோடு  அதற்கான என்னுடைய தனிப்பட்ட விளக்கத்தையும் தர விரும்புகிறேன். 

1. முஸ்லிம் சமூகம் என்பது பேஸ்புக் கணக்கு வைத்திருக்கும் முஸ்லிம்களை மட்டும் குறிக்கபடமாட்டா.

2.இக்குறிப்பிட்ட அமைச்சானது 100 நாட்களுக்கு மட்டுமே.

3.பலராலும் விமர்சிக்கபதடுவதனால்  அவரைப் பிழையாக கருதமுடியாது .

4.அவருக்கு அமைச்சுப்பதவி வழங்கப்பட்ட பின்னரே அவருடைய சேவையினை நாடுபூராகவும் அறியப்பெறலாம்.100 நாட்களின் பின் அமைச்சரவை  மற்றும் பாராளுமன்றம் கலைக்கப்படும் சேவை செய்யாவிடின் அதன்போது அவரை வீட்டுக்கு அனுப்பலாம்.

5.சிங்களவர்களோடு அன்னியோணியாக முஸ்லிம் கலாசாரத்துடன்  பழகிவாழ்வது சிறந்ததது அவ்வாறு இல்லாதுவிடத்து அவரை தனிப்பட்ட முறையில் அணுகி வழிகாட்டல் வேண்டும் அது எம் கடமை.

6.முஸ்லிம் விவகார அமைச்சு பெரும்பாலும் ஹலீம் அவர்களுக்கு வழங்கப்பட்டால் அவர் ஓரளவாவது முஸ்லிங்களுடன் அன்னியோனிய்மாக பழக நிர்பந்திக்கப் படுவார்.

7.எப்பொழுதும் நம் ஊடக தார்மீகம் பாதுகாக்கப்பட வேண்டும்.

8.ஷேய்க் ஷபீக் அவர்களுக்கு ஹலீம் அவர்களை நன்றாக தெரியும் அகவே அவருக்கான அறிவுறுத்தல்களை  வழங்குதல் சாலச்சிறந்தது.ஒரு முஸ்லிமின் தவ்வா கடமை.

9.கடந்த அரசில் எமது முஸ்லிம் கலசார அமைச்சு புத்த சாசன அமச்சிற்கு கீழே செயற்பட்டது குறிப்பிடததக்கது.

எனக்கு ஹலீம் அவர்களை தனிப்பட்டமுறையில் தெரியாது அவர் ஒரு ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் என்பது மட்டுமே.

மேற்குறிப்பிட்ட அனைத்தும் எனது தனிப்பட்ட கருத்துக்கள் என்பதோடு ஜாப்னா முஸ்லிம் ஆசிரியர் அவர்களே கட்டுரைகளை பிரசுரிக்கமுன் அவை சமுகத்திற்கு தேவையானவை மற்றும் நாகரிகமனவை என்பதனை  சமகாலத்தையும் கருத்திற்கொண்டு முஸ்லிம் உடக தர்மீகத்துடன் பதிவிடல் நல்லது என நான் பணிவாய்  வேண்டிக்கொள்கிறேன்.
Share it:

Post A Comment:

0 comments: