-மு.இ.உமர் அலி-
இலங்கையில் மகிந்த அரசை ஒழித்துக்கட்டுவதில் சிறுபான்மை இன மக்கள் வழங்கிய ஒத்தாசையை யாரும் மறுக்க முடியாது, அந்த வகையில் சிறிலங்கா முஸ்லீம்காங்கிரஸ் நேரம் தாழ்த்தினாலும் சரியான வேளையில் மாற்றத்துக்கான அணியுடன் இணைந்து தனது பங்களிப்பை செய்திருக்கின்றது என்று கூறலாம்.
நாட்டில் நல்லாட்சியை நிலை நிறுத்துவதற்காகவும்,தமக்கு அஆதரவு வழங்கிய கட்சிகளுடனான உறவினை சுமுகாமாக பேணுவதற்குமாக சில பல அமைச்சுப்பதவிகளை அரசு அவர்களுக்கு வழங்கி வருகின்றது.
முஸ்லீம் காங்கிரசிற்கு இன்னும் இரு ராஜாங்க அமைச்சுக்கல் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் கசிகின்றன.
அந்த வகையில் வழங்கப்பட இருக்கும் அமைச்சுக்களை எப்படி கட்சி பகிரப்போகின்றது? என்ன அடிப்படையில் பகிரப்போகின்றது? வழங்கப்பட இருக்கும் அமைச்சுக்களிலொன்று ,கட்சியின் கட்டுக்கொப்பினை பாதுகாத்துவரும் மிக்கவும் மூத்த போராளியான பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஹசன் அலி அவர்களுக்கு வழங்கப்படுதல் மிகவும் முக்கியமானதாகும்.
கட்சியை இக்கட்டான நிலமைகளில் தலைமையுடன் சேர்ந்து வழிநடாத்துவதில் மட்டுமன்றி நியாயத்திற்காக கட்சித்தலைமையுடனும் முரண்படும் இந்த யதார்த்தவாதிக்கு இந்தக்கட்சி இதுபோல ஒரு கைமாறினை ஏன் செய்யக்கூடாது.
விருப்பமின்றியே மகிந்தவின் அரசிலோட்டிக்கொண்டு மகிந்த அரசினை விமர்சித்த இவர் இதுவரை எந்தப்பதவிக்கும், ஆசைவார்தைகளுக்கும் சோரம்போகாதவர் இந்த மனிதருக்கு இப்பதவியில் ஒன்று வழங்கப்படுமெனில் மக்களிடையே பிரகாசம்குன்றிக்கிடக்கும் சிறீலங்கா முஸ்லீம்காங்கிரசின் எதிர்கால வளர்ச்சிக்கு இது வழி கோலும் என்று கூறமுடியும்.


.jpg)
Post A Comment:
0 comments: