100 நாட்களின் பின், தேசப்பற்றுள்ள அரசாங்கம் - பிரதமர் பதவிக்கு மஹிந்த போட்டி

Share it:
ad
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவார் என ஹெல உறுமய கட்சியின் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று 13-1-2015 நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நூறு நாள் செயற் திட்டத்தின் பின்னர் தேசப்பற்றுடைய அரசாங்கமொன்று அமைக்கப்படும். புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தை சீர்குலைக்கப் போவதில்லை. எதிர்வரும் ஏப்ரல் மாதம் பெரும்பாலும் பொதுத் தேர்தல் நடைபெறும். இந்த தேர்தலில் பிரதமர் பதவிக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போட்டியிடுவார் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

ஜாதிக ஹெல உறுமய கட்சியிலிருந்து மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளித்த உதய கம்மன்பில இறுதி நேரத்தில் மீண்டும் அப்போதைய ஆளும் கட்சியில் இணைந்து கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தனது ஆதரவினை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Share it:

Post A Comment:

0 comments: