றவுப் ஹக்கீமிடம் ஒரு வேண்டுகோள்..!

Share it:
ad

நாட்டின் ஏழாவது ஜனாதிபதித் தேர்தல் முடிந்து அதன் ஆறாவது அதிமேதகு ஜனாதிபதியாக மைத்திரிபால சிரிசேன அவர்கள், மக்கள் மாற்றம் ஒன்றை விரும்பியதன் காரணமாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதற்காக முஸ்லிம் மக்களின் தனிப்பெரும் கட்சியான முஸ்லிம் காங்கிரசும் சரியான நேரத்தில் எடுத்த சரியான தீர்மானமும் ஒரு உந்துதலாக அமைந்தது எனலாம். அதனை அதிமேதகு ஜனாதிபதி அவர்களும் தனது உரையொன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அது அவ்வாறிருக்க, அம்பாரை மாவட்டத்தின் கல்முனை, சம்மாந்துறை மற்றும் பொத்துவில் பிரதேச முஸ்லிம் மக்கள் முன்னரை விடவும் இந்தத் தேர்தலில் ஜனாதிபதியாக மைத்திரிபால சிரிசேன அவர்களைத் தெரிவு செய்வதில் பாரிய பங்களிப்புச் செய்தார்கள் என்பது தேர்தல் முடிவுகளின் வெளிப்படையான உண்மையாகும்.

அந்தவகையில், இந்த மகத்தான வெற்றியின் பங்காளிகளான இம்மாவட்ட முஸ்லிம்களை கௌரவிப்பீர்கள் என்பது எங்களின் நம்பிக்கையாகும். மறைந்த தலைவரின் பாசறையில் வளர்ந்து பல அனுபவங்களுடன் இம்மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கும் சகோ. எச். எம். எம். ஹரீஸ் அவர்களை பாராளுமன்றத்தின் பொறுப்பான ஒரு உயர் பதவியொன்றின் மூலமாக இந்த மாவட்ட மக்களின் ஒரு கவலையைப் போக்குவீர்கள் என நம்புகின்றோம். தற்கால இப்பிராந்திய அரசியல்வாதிகளில் இவரே அதற்குப் பொருத்தமானவர் என்பதை சகலரும் ஏற்றுக்கொள்வார்கள்.

அவரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் முடியாமலும், முடியும் தறுவாயிலும் இருக்கின்ற நிலையில், தங்களின் கட்சிக்குக் கிடைக்கவிருக்கின்ற அமைச்சு அல்லது பிரதியமைச்சுப் பதவிகளில் ஒன்றை இம்முறை சகோதரர் ஹரீசுக்கு வழங்குவதன் மூலமாக இந்தக்கட்சிக்காகப் பல்வேறு தியாகங்களைச் செய்து கொண்டிருக்கும் இந்த மாவட்டத்தின் மக்களை கௌரவிக்குமாறு இப்பிரதேச மக்களின் சார்பாக கோரிக்கை விடுக்கின்றோம்.
டாக்டர் என். ஆரிப்
தலைவர் - பிறைட் பியுச்சர் பவுண்டேசன்

Share it:

Post A Comment:

0 comments: