யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் மோதல் சம்பவம் -

Share it:
ad
-FAROOK SIHAN-

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் நேற்று இரவு மீண்டும் மோதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

இதன் போது வீதியில் இறங்கிய இரு குழுவினர் தங்களிற்கு கிடைத்த ஆயுதங்கள் சோடா போத்தல்களின் உதவியுடன் தாக்குதலை மேற்கொண்டிருந்ததை முடிந்தது.

இம்மோதலால் 3  கடைகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த ஆயிரக்கணக்கான சோடா போத்தல் களவாக எடுக்கப்பட்டு தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. வீதிகளில் சில இடங்களில் இரத்தம் சிந்திக்காணப்படுவதை அவதானிக்கலாம்.

நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்ற இம்மோதல் சம்பவம் இராணுவத்தினர் ,பொலிசாரின் நடவடிக்கை காரணமாக அதிகாலை 2 மணியளவில் முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போது பொலிஸார் ,இராணுவம்  இப்பகுதியில் ரோந்து சேசவையில் ஈடுபடுகின்றனர்.

கடந்த மாதம் நடைபெற்ற விளையாட்டு போட்டி ஒன்றில் ஏற்பட்ட பகையுணர்வே இம்மோதலுக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் அப்பகுதி வீதிகளில் சிதறிக்கிடக்கும் போத்தல் சிதறல்களை யாழ் மாநகர சபை ஊழியர்கள் சுத்தம் செய்கின்றனர்.


Share it:

Post A Comment:

0 comments: