வென்னப்புவ – லுனுவில பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை கொலை செய்து குழியொன்றில் புதைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
லுனுவில பிரதேச மருத்துமனையில் மருத்துவர் ஒருவரும் அவரது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளும் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இன்று 1-1-2015 மதியம் குறித்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தகவல் வெளியிட்டுள்ளது.
வென்னப்புவ – நயினாமடம பிரசேத்தைச் சேர்ந்த பெண் மருத்துவரின் வயது 49 எனவும், ஆண் பிள்ளையின் வயது 15 எனவும், பெண் பிள்ளையின் வயது 13 எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவரின் கணவர் தென்னை நார் தொழிற்சாலையொன்றை செயற்படுத்தி வந்த வர்த்தகர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கண்டுபிடிக்கப்பட்ட சடலங்களில் கற்கள் பிணைக்கப்பட்டிருந்ததுடன், வெட்டுக்காயங்களும் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த மருத்துவர் கடந்த இரண்டு நாட்களாக பணிக்கு சமூகமளிக்காத நிலையில், அவரது தொலைபேசிகளும் செயற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


.jpg)
Post A Comment:
0 comments: