வரலாறு கண்ட பொத்துவில் ஆதார வைத்தியசாலை

Share it:
ad
மலர்ந்திருக்கும் 2015ம் ஆண்டின் முதல் நாளிலே பொத்துவில் ஆதார வைத்தியசாலை வரலாறு கண்டுள்ளது.

அதாவது, கடந்த காலங்களில் ஆதார வைத்தியசாலை என்ற நாமத்திலேய பல தொழிநுட்ப கருவிகளைக் கொண்டும் ஆளனி இல்லாத (மகப்பேற்று மருத்துவ நிபுணர்) துர்பாக்கிய நிலையில இவ்வைத்தியசாலை இயங்கி வந்தது. இருந்த போதும் பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் புதிய அபிவிருத்திக் குழுவின் வருகையும், வைத்திய அத்தியட்சகர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீன் அவர்களின் முயற்சியினாலும் வைத்தியசாலைக்கு ஓர் நிரந்தரமான மகப்பேற்று மருத்துவ நிபுணர் (ஏழுபு) கொண்டு வரப்பட்டதற்கு அமைவாக இன்று காலை பொத்துவில் ஆதார வைத்தியசாலை வரலாற்று தடம் ஒன்றை பதிவு செய்துள்ளது.

கோமாரி – 01 பிரிவைச் சேர்ந்த பிரதீஸ்வரன் செல்வராணி (வயது 41) கர்ப்பிணித் தாய்க்கு பொத்துவில் ஆதார வைத்தியசாலை மகப்பேற்று மருத்துவ நிபுணர் எல்.ஆர்.ஏ.விஜயசூரிய, வைத்திய அத்தியட்சகர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீன் அவர்களின் தலமையிலான வைத்திய குழு இன்று காலை மேற்கொண்ட அறுவை சத்திரை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு குறித்த தாயக்கு 4200 கிராம் எடையுள்ள ஆண் குழந்தை மு.ப.11.43 மணிக்கு கிடைத்துள்ளது.

இது குறித்து எமது செய்தியாளர் குறித்த பெண்ணின் குடும்ப உறவினர்களை தொடர்பு கொண்டு வினவிய போது மிகவும் சந்தோஷமாகவுள்ளது. பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் இவ்வாறான வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். ஏனெனில் கடந்த காலங்களில் நாங்கள் அயல் பிரதேசங்களிலே இவ்வாறான சிகிச்சைகளுக்கு அனுப்பப்பட்டோம், அதனால் பல சிரமங்களையும் எதிர்நோக்கினோம் ஆனால் இன்றோ அவ்வாறில்லை என கருத்து தெரிவித்தார்கள்.

மேலும் பொத்துவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக் குழுத் தலைவர் ஏ.எம்.றபீக் அவர்களை தொடர்பு கொண்ட போது எமது இம்முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய வைத்திய அத்தியட்சகர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீன், வைத்தியர் குழு, வைத்தியசாலை அபிவிருத்தி உறுப்பினர்கள், பொத்துவில் பிரதேச சபை மற்றும் பொத்துவில் நலன் விரும்பிகள் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

முகம்மட் சாலி சம்சுல் ஹுதா, பொத்துவில்

Share it:

Post A Comment:

0 comments: