சிறுவனுக்கு ஆபாசபடம் காட்டிய பாதிரியார் கைது

Share it:
ad
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில், சிறுவனுக்கு ஆபாசபடம் காட்டியதாக இந்திய பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்தியாவின் புனித தாமஸ் அபோஸ்தல் தேவாலயத்தின் பாதிரியாராக இருந்த ஜோஸ் பலிமட்டோம், கடந்த டிசம்பர் 2014 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மேற்கு பாம் கடற்கரையில் உள்ள ஹோலி நேம் ஆப் ஜீசஸ் தேவாலயத்தில் வருகை பாதிரியாராக தனது இறை சேவையை தொடங்கினார். 

47 வயதான அவர், கடந்த ஞாயிறன்று 14 வயதான சிறுவனிடம் தன்னுடைய போனில் இருக்கும் 40 சிறுவர்களின் ஆபாசப்படங்களை நீக்கி தருமாறு கேட்டுள்ளார். தன்னிடமுள்ள ஆபாசப் படங்களை காட்டி சிறுவனுக்கு பாலியல் உந்துதல் ஏற்படுத்திய இச்சம்பவம் வெளியே தெரிய வந்ததையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு பாம் பீச் கவுண்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். 

காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் அவர் இறை சேவையாற்றும் போது, சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததும், அது தெரிந்த அமெரிக்க தேவாலய தலைமை பாஸ்டர், சிறுவர்களிடம் பழகக் கூடாது என்று இவருக்கு தடை விதித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Share it:

Post A Comment:

0 comments: