சஜின் டி வாஸ் குணவர்தனவின் வீட்டிலிருந்த யானைக்குட்டி மீட்கப்பட்டது
பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவின் வீட்டு வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட யானைக் குட்டியின் பெறுமதி ஒரு கோடி ரூபா என வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த யானைக்குட்டி 2009 ஆம் ஆண்டு வன ஜீவராசிகள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.
சஜின் டி வாஸ் குணவர்தனவின் அம்பலாங்கொடையில் உள்ள வீட்டினை ஹிக்கடுவ வனஜீவராசிகள் அதிகாரிகள் சுற்றிவளைத்தபோது இந்த யானைக்குட்டியைக் கண்டுள்ளனர்.



Post A Comment:
0 comments: