நவீன் திசாநாயக்கவின் அதிரடி

Share it:
ad
(Nf)

சுற்றுலாத்துறை அமைச்சின் சில ஆவணங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை அமைச்சில் இன்று (13) மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின் பின்னரே அமைச்சர் இதனைக் கூறினார்.

இலங்கை சுற்றுலா மற்றும் அபிவிருத்தி ஊக்குவிப்புப் பணியகத்தின் சில ஆவணங்களை அமைச்சர் நவீன் திசாநாயக்க இன்று பரிசீலித்தார்.

இதன்போது, சுற்றுலாத்துறைக்குள் சில கோப்புகளை அழிப்பதற்கு முயற்சிகள் நடப்பதாகத் தமக்கு தகவல்  கிடைத்துள்ளதென அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து தாம் உடனடியாக சுற்றுலாத்துறை அமைச்சிற்கு சென்று அங்கிருந்த கோப்புக்களுக்கு சீல் வைத்ததாகக் குறிப்பிட்டார்.

ஊவா மாகாண சபைக்கு இந்த நிறுவனத்தின் ஊடாக 90 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதுபோன்று, ஜனாதிபதித் தேர்தலுக்கும் அதனை விட மூன்று, நான்கு மடங்கு செலவு செய்துள்ளமை தொடர்பில் அறியக்கிடைத்துள்ளது. இதிலுள்ள ஒவ்வொரு சதமும் மக்களுடையது. இவ்வாறான ஆவணங்களை அழிப்பதாக ஏதேனும் தகவல்கள் கிடைத்தால், அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், அரசியல் அதிகார சபைக்கும் தகவல்களை வழங்குமாறு நாம் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்
என சுற்றுலாத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.
Share it:

Post A Comment:

0 comments: