பிரான்ஸின் நையாண்டி பத்திரிகையான சார்லி ஹெப்டோ தாக்குதலுக்கு பின்னரான தனது முதலாவது பதிப்பின் அட்டைப் படத்தில் இறைத்தூதர் முஹமது நபியை சித்தரிக்கும் வகையில் கேலிச் சித்திரத்தை மீண்டும் ஒருமுறை வெளியிடவுள்ளது.
தாக்குதலுக்கு பின்னர் தற்காலிக அலுவலகம் ஒன்றிலிருந்து நடத்தப்பட்டு வரும் சார்லி ஹெப்டோ பத்திரிகையின் புதிய பதிப்பு இன்று புதனன்று வெளியாகவுள்ளது. இதன் அட்டைப் படத்தில், நபிகள் நாயகத்தை சித்தரித்து அவரது கையில் (நான்தான் சார்லி) என்ற வாசகம் கொண்ட பதாகை இருக்கும்படியாக சித்தரிக்கப்பட்டுள்ளது. சார்லி ஹெப்டோ பத்திரிகை தாக்குதலுக்கு எதிரான அர்ப்பாட்டங்களில் இந்த வாசகமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தக் கருத்துச் சித்திரத்தின் தலைப்பில் (எல்லாம் மன்னிக்கப்பட்டுவிட்டது) என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த வாரம் மூன்று நாட்கள் தொடர்ந்த தாக்குதல்களில் மொத்தம் 17 பேர் கொல்லப்பட்டனர். இதில் பலியான நான்கு ய+தர்களின் இறுதிக் கிரியை இஸ்ரேலில் இடம்பெற்றது.
இந்த தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து 10,000 துருப்புகளை பாதுகாப்பு கடமைகளுக்கு நிறுத்த பிரான்ஸ் அரசு தீர்மானித்துள்ளது. தாக்குதலுக்கு எதி ராக உலகத் தலைவர்களும் பங்கேற்ற பாரிய பேரணி யொன்று பாரிஸில் கடந்த ஞாயிறன்று இடம்பெற்றது.
சார்லி ஹெப்டொவின் புதிய பதிப்பு அட்டைப் படம் கடந்த திங்களன்று பிரான்ஸின் ஊடங்கள் மற்றும் பிரான்ஸ{க்கு வெளியில் வொ'pங்டன் போஸ்ட், nஜர்ம னின் பிராங்போர்ட அல்கமின், இத்தாலியின் கொர்ரிய செரா மற்றும் பிரிட்டனின் கார்டியன் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டிருந்தன.
ஒவ்வொரு வாரமும் வெறும் 60,000 பத்திரிகைகளை பிரசுரிக்கும் சார்லி ஹெப்டோ தனது புதிய பதிப்பில் மூன்று மில்லியன் பத்திரிகைகளை பிரசுரிக்கிறது.
சார்லி ஹெப்டோ பத்திரிகையின் வழக்கறிஞர் ரிச்சர்ட் மல்கா பிரான்ஸ் வானொலி ஒன்றுக்கு குறிப்பிடும்போது, 'நான்தான் சார்லி என்ற கொசத்தின் உற்சாகத்தை நாம் விட்டுவிடப்போவதில்லை. மத நிந்தனைக்கான உரிமை யையே இது அர்த்தப்படுத்துகிறது" என்றார்.
துப்பாக்கிதாரிகளின் தாக்குதலில் இருந்து உயிர்தப்பிய சார்லி ஹெப்டோ பத்திரியை ஊழியர்கள் புதிய பதிப்பை வெளியிடுவதற்கு பிரான்ஸின் விடுதலை பத்திரிகை இயக்கமும் உதவி புரிந்துள்ளது.
கடந்த வாரம் பத்திரிகை அலுவலகத்திற்குள் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் சார்லி ஹெப்டோ பத்திரி கையின் ஆசிரியர் மற்றும் அதன் ஐந்து கேலிச்சித்திரக் காரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த புதிய பதிப்பு சார்லி ஹெப்டோவின் மக்களுக்காக பிரசுரிக்கப்படுகிறது என்று அந்த பத்திரிகையின் வர்த்தகப்பிரிவு ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக முஹமது நபியை அவமதிக்கும் வகையில் சார்லி ஹெப்டோ பத்திரிகை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் கேலிச்சித்திரங்களை வெளியிட்டிருந்தது. இவ்வாறு கடந்த 2011 ஆம் ஆண்டு இறைத்தூதரை அவமதிக்கும் கேலிச்சித்திரத்தை வெளியிட்டதை அடுத்து சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
சயிட் மற்றும் சரிப் கவு ச்சி என்ற சகோதரர்களே பத்திரிகை அலுவலகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன்போது அவர்கள் 'இறைத்தூதர் முஹமதுவுக் காக பழிதீர்க்க வந்தோம்" என்று கூச்சலிட்டதாக சம்ப வத்தை பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வடக்கு பிரான்ஸில் வைத்து பொலிஸ் முற்றுகையில் இந்த சகோதரர்கள் கொல்லப்பட்டனர்.
மறுபுறத்தில் இந்த சகோதரர்களுடன் தொடர்புபட்டவர் என கூறப்படும் அஹமதி கொலிபாலி கிழக்கு பாரிஸில் இருக்கும் சுப்பர் மார்க்கெட்டில் நால்வரை கொன்றார்.
இவரும் பொலிஸ் தாக்குதலில் கொல்லப்பட்டார். முன்னர் இவர் பெண் பொலிஸார் ஒருவரையும் பாரிஸ் நகரில் சுட்டுக் கொன்றார்.
இந்த தாக்குதல் கும்பலுடன் தொடர்புடைய மேலும் ஆறு பேர் தலைமறைவாகி இருப்பதாக பிரான்ஸ் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.



Post A Comment:
0 comments: