அல் அஸ்ரக் கனிஷ்ட பாடசாலையின் வித்தியாரம்ப விழா இன்று 2015 Jan 19th திங்கட்கிழமை அதிபர் M ஹபீபுல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.இவ்விழாவில் பிரதம அதிதியாக நிந்தவூர் கோட்டக்கல்வி பணிப்பாளர் S.L.M சலீம் அவர்கள் கலந்து நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் அதிபர் S.MM.ஜாபீர் ,உதவி அதிபர் M.இப்ராஹீம் ஆரம்பப்பிரிவு அதிபர் M.I.இஸ்ஹாக் , நிந்தவூர் நெல்லித்தீவு கிராம அபிவிருத்தி சங்கத்தினர் உட்பட பெற்றோர்களும் கலந்துகொண்டனர் .
முதலாமாண்டு மாணவர்களை இரண்டாம், மூன்றாம்,நான்காம்,ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் மலர் மாலை அணிவித்து, மலர்களை அவர்கள் மேல் தூவி வரவேற்று வகுப்பறைகளிற்குள் அழைத்துச்சென்றனர். முதலாம் ஆண்டில் இதுவரை ஆண் பெண் இருபாலாருமாக மொத்தமாக ஐம்பது மாணவர்கள் வருகை தந்தனர்.
அதிபர் S.MM.ஜாபீர் தமது உரையில்,
மாணவர்களையும் ஏனையவர்களையும் வரவேற்று வாழ்த்தினார்.மாணவர்கள் நேரந்தவறாது ,சீருடைகளுடன் பாடசாலைக்கு வருதல்வேண்டும்,அதுபோல்பெற்றோர் மாணவர்களை பாடசாலை பாடசாலை முடிவடைந்ததும் கூட்டிச்செல்ல வருதல் வேண்டும்என்று குறிப்பிட்டார்.மேலுமவர் பேசுகையில் புதியதாக அமைக்கப்பட்ட இப்பாடசாலையின் முன்னேற்றத்திற்காக தான் முடியுமான முயற்சிகளை அர்ப்பணிப்புடன் செய்வேன் என்றும் குறிப்பிட்டார்.
"இன்று உற்சாகத்துடன் முன்னிற்பது போன்று பெற்றோராகிய நீங்கள் என்றும் இந்த சிறார்களின் கல்வி விடயத்தில் முழு மூச்சாக பாடுபடவேண்டும்,பாடசாலையின் முதலாம் நாள் வருகின்ற சில பெற்றோர்கள் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராக்குவதற்கு வருவார்கள் ,நீங்கள் அவ்வாறிருக்கக்கூடாது.' என்று கோட்டக்கல்வி அதிகாரி அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டார்.







Post A Comment:
0 comments: