-அனா-
2015ம் ஆண்டுக்கு புதிதாக தரம் ஒன்றுக்காக சேர்த்துக் கொள்ளப்பட்ட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இடம் பெற்றது.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரிவில் ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலக பிரிவில் உள்ள வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்றுக்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட மாணவர்களை தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவர்கள் வரவேறகும் நிகழ்வு வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தலைமையில் இடம் பெற்றது.
ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவில் உள்ள இருபத்திரெண்டு பாடசாலைகளில் ஆயிரத்தி ஐநூறு (1500) மாணவர்கள் 2015ம் ஆண்டுக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன் அதில் வாழைச்சேனை ஆயிஸா மகளிர் மகா வித்தியாலயத்தில் எழுவது மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.




Post A Comment:
0 comments: