அரசாங்கத்திற்கு தேர்தல் பயம் ஏற்பட்டுவிட்டது - இதனால்தான் பொருட்கள் விலை குறைந்தன - Jvp

Share it:
ad
ஜனாதிபதி தேர்தலை இலக்காக வைத்து நிவாரணங்களை வழங்க வேண்டாம் என்று ஜே வி பி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத், கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து இதனைக் கூறியுள்ளார்.

மக்களின் நலன் குறித்த உண்மையான அக்கறையுடன் நிவாரணங்களை வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகளை மேலும் குறைத்திருக்க முடியும்.

ஆனால் அரசாங்கம் அவ்வாறு செய்யாது. உலக சந்தையில் நீண்டகாலமாக மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி அடைந்து காணப்படுகிறது. எப்போதே இந்த நிவாரணங்களை வழங்கி இருக்க முடியும்.

ஆனால் அரசாங்கம் ஏன் இவ்வளவு தாமதமாக இந்த நிவாரணங்களையும, விலைக்குறைப்புகளையும வழங்குகிறது? தேர்தல் பயம் ஏற்பட்டுள்ளதால்தான் இந்த நிவாரணங்கள் தற்போது வழங்கப்படுகின்றன.

ஆனால் மக்கள் மீது உண்மையான அக்கறையை கொண்டு வழங்கப்படுகின்ற நிவாரணங்களே நிலையானது என்று அவர் கூறியுள்ளார்.
Share it:

Post A Comment:

0 comments: