நிசாம் காரியப்பருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - பொது பலசேனா

Share it:
ad
-அஸ்ரப் ஏ சமத்-

ஸ்ரீ.ல.முஸ்லீம் காங்கிரசின் பிரதிச் செயலாளர் நிசாம் காரியப்பருக்கு எதிராக பொதுபலசேனா நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக நேற்று ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நிசாம் காரியப்பர் கடந்த 15ஆம் திகதி லண்டன் பீ.பீ.சி சேவையின் சந்தேசிய சிங்களச் செய்திச் சேவையில் தெரிவித்த கருத்துக்கு எதிராகவே சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசாரத தேரர் திலந்த விதானகேயும் நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

நிசாம் காரியப்பர் தெரிவித்த கருத்தாவது – எதிர்வரும் ஜனாதிபதித தேர்தலின்போது முஸ்லீம்கள் மைததிரிபால சிறிசேனாவுக்கு வாக்களித்தால் 1915 ல் பௌத்த முஸ்லீம் கலவரமொன்று ஏற்படும்  என பொதுபலசேனா தெரிவித்துள்ளதாக பீ.பீ.சிக்கு காரியப்பர் தெரிவித்திருந்தார். இக் கருத்தை அடுத்த நாள்; பீ.பீ.சி சேவை ஊடாக பொதுபலசேனா மறுத்திருந்தது.

இக்கருத்தை நிசாம் காரியப்பர் வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் அத்தோடு இவ்வாறு நாங்கள் கூறியிருந்தால் அதனை அவர் எங்களுடன் விவத்திற்கு வரவேண்டும. இல்லாவிட்டால் நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக  பொதுபலசேனா நிறைவேற்று அதிகாரி விதானகேயும் செயலாளர்; ஞானசாரதேரரும் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

Share it:

Post A Comment:

0 comments: