கெலிஓயா - கலுகமுவ பகுதியில் முஸ்லிம் குடும்பங்கள் பாதிப்பு

Share it:
ad
-எம்.எம்.எம். ரம்ஸீன்-

கண்டி மாவட்டத்தில் தொடரும் சீராற்ற காலநிலையால் கெலிஓயா கலுகமுவ பகுதியில் 26 முஸ்லிம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களின் குடியிருப்புக்களுக்குள் மண்சரிந்து வீழ்ந்துள்ளதுடன் தொடர்ந்தும் மண் சரிவு அபாயம் நிலவுகின்றது. 

இதேவேளை நேற்று முன்தினம் மஹாவலி கங்கையில் நீர்பெருக்கெடுத்ததால் இப்பகுதியில் பல குடியிருப்புக்கள் வர்த்தக நிலையங்கள்  நீரில்  மூழ்கியமையும் குறிப்பிடத்தக்கதாகும். 

இக்குடும்பங்களின் குடியிருப்புக்கள் தொடர்ந்தும் மண்சரிவு அபாயத்திற்குள்ளாகியுள்ளதால் இக்குடும்பங்கள் கலுகமுவ முஸ்லிம் மத்திய கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.  

Share it:

Post A Comment:

0 comments: