''நான் வெட்டினா'' ஆறுமுகன் தொண்டமான்

Share it:
ad
-அஸ்ரப் ஏ சமத்-

நான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எவ்வித நிபந்தணையற்ற ஆதரவை தெரிவித்திருந்தேன். நான் வெட்டினா துண்டு ஒன்றுதான். இரண்டாவதுக்கு போவதில்லை. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இன்று நுவரேலியாவில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்சை ஆதரித்து நடாத்திய கூட்டத்தில் உரை. ஜனாதிபதியும் கலந்து கொண்டார்.

அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் 

இந்த நாட்டில் அடுத்த 9ஆம் திகதியும் மஹிந்த ராஜபக்சதான் ஜனாதிபதி. அவர் முதலில் யுத்தத்தை வெண்று தந்தார். அதன் பிறகு அபிவிருத்தியைச் செய்து தந்தார். நான் அவரிடம் 9ஆம் திகதி இந்த மக்களது தேவை அடங்கிய பாரிய பட்டியலைத் தயாரித்துள்ளேன். அதனை அவர் செய்து தருவார். நுவரெலியாவில் சில சில்லரைகள் வந்து பூஞ்சாட்டி காட்டிட்டுப் போனார்கள். அதற்கெல்லாம் நீங்கள் கவணத்திற்கெடுக்க வேண்டாம். அவர்களும் இந்த 3 வருடம்  அரசோடு தான் இருந்தாhகள். அப்போது அவர்கள் சொல்கின்ற பிரச்சினைகள்  தெரியவில்லையா ? 

இந்த நாட்டில் உள்ள தொழிலாளர் வர்க்கத்திணர் இலங்கை தொழிலாளர் காங்கிரசில்  தான் ஒன்றுகூடி  இருக்கின்றார்கள். நான் யாருக்கு வாக்குப் போடச் செல்கின்றேனோ அவர்களுக்;கு எமது மக்கள் வாக்குப்போடுவார்கள்.  ஜனாதிபதி  வெற்றிபெறற்தும் நுவரெலியா பதுளை வாழ் சகல தோட்டத் தொழிலாளருக்கும்  7பேர்ச் காணி வழங்கி வீடு கட்டித் தருவார்;. என ஆறுமுகன் தொண்டமான் இன்று நுவரேலியாவில் உரையாற்றும்போது தெரிவித்தார். நான் 9ஆம் திகதி இந்தியாவுக்கு போகிவிடுவேன். என சிலர் சொல்கின்றனர். நான் ஏன் செல்லவேண்டும். இந்தியாவுக்கு மோடி பிரதமர் இலங்கைக்கு மஹிந்த ராஜபக்சதான் ஜனாதிபதி. இந்த ஜனாதிபதி இந்த தோட்டமக்களுக்கு பல சேவைகளை செய்து தந்துள்ளார் அதனை நீங்கள் மறக்க வேண்டாம். அந்தப் பக்கம் 45 பேர் சென்றாலும் அது அச்சாரு. இந்தப் பக்கம் ஒருத்தர் இருந்தாப் போதும். என அமைச்சர் ஆறுமுகம்; தொண்டமான் உரையாற்றினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உரையின்போது,

உங்கள் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் எந்த வேண்டுகோழுமின்றி நிபந்தணையற்ற ஆதரவை ஒரு மாத்திற்கு முன்பே  எனக்குத் தெரிவித்திருந்தார். நான் உங்கள் பகுதிக்கு 3000 ஆசிரியர்கள் நியமணம் செய்தேன். 2000 இலட்சம் செலவில் நுவரெலியா வைத்தியசாலை நிர்மாணித்து தந்துள்ளேன். கிராமசேவகர், பொது சுகாதார அதிகாரிகள் 500 பேரை நியமித்துள்ளேன். எதிர்வரும் காலங்களில் நான் 7 பேர்ச் காணி கொடுத்து சகலருக்கும் தணித்தனி வீடு அமைப்பதற்கு உத்தரவு இட்டுள்ளேன். ஏற்கனவே கோட்டாபயா ராஜபக்ச அதனை செயல்படுத்தி வருகின்றார். அதில் 3 திட்டம் ஏற்கனவே பதுளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் இந்த கொட்டும் மழையிலும் மண்சரிவையும் கவணிக்காது எனக்கு ஆதரவு தெரிவிக்க இவ்வளவு பாரிய அளிவில் மக்கள் நிறைந்து காணப்படுகின்றீர்கள். உங்கள் தலைவன் சொல்வதை நான் செய்வேண். ஏதிர்காலத்தில் உயர்தரம படித்த மாணவர்கள் 1இலட்சத்து 50ஆயிரம்பேருக்கு அரச தொழில் வழங்குவேன்.  குணனி படிப்பதற்கு 3000 ருபாவை மாணவர்களுக்கு வழங்குவேன். நுவரெலியாவில் கல்விகல்லூரி பல்கழைக்கழகமொன்றை அமைத்து தருவேண். 50கிலோ பசளையை 300 ருபாவுக்கு வழங்குவேண்.

எனது வீட்டில் என்னோடு இருந்து அப்பம் சாப்பிட்டு விட்டு அது சமிபாடு அடைய  முன்னர் சென்றவர்தான் இந்த மைத்திரிபால சிறிசேனா.  அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில்  அரச தொழிலாளர்களை இலட்சக்கணக்கில் குறைக்க உள்ளனர். பல்கலைக்கழக மாணவர்களை கல்வி கற்பதற்கு கடன் வழங்குவார்களாம். அதன் கருத்து உங்களிடம் கல்வி கற்பதற்கும் பணம் அறவிட உள்ளனர்.  நான் சகலதையும் உங்களுக்கு இலவசமாக தருவேன். என ஜனாதிபதி உரையாற்றினார்.

Share it:

Post A Comment:

0 comments: